சபரிமலையின் விரிவான வளர்ச்சியை திட்டமிடவே ஐயப்ப சங்கமம்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேச்சு
பத்தனம்திட்டா, செப்.20- சிலர் பரப்பி வருவது போல், ஐயப்ப சங்கமம் திடீரென முடிவு செய்யப்பட வில்லை. பல வருட ஆலோசனை மற்றும் விவாதங்களுக்குப் பிறகு உலகளா விய ஐயப்ப சங்கம் ஏற்பாடு செய்யப்பட்ட தாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு 70ஆம் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பம்பாவில் ஏற்பாடு செய்யப்பட்ட உலகளாவிய ஐயப்ப சங்கத்தைத் தொடங்கி வைத்து முதலமைச்சர் மேலும் பேசியதாவது: “மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சபரிமலையை உலக அளவில் கவனிக்கத்தக்கதாக மாற்று வது குறித்துப் பேசினர். விமானத்தில் இரு முடிகட்டு கொண்டு வரும்போது ஏற்படும் சிரமங்களைத் தீர்க்க தலையிடுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். பிரச்ச னையைத் தீர்க்க ஒரு கூட்டத்தை அழைக்க வேண்டும் என அவர்கள் கேட்டனர். உலக ளாவிய ஐயப்ப சங்கமம் பற்றிய எண்ணங்கள் அங்குதான் தொடங்கின. சபரி ரயில், ரோப்வே மற்றும் விமான நிலையங்களை உள்ளடக்கிய ஒரு அறிவியல் மாஸ்டர் பிளான் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த மாஸ்டர் பிளானின் விவரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். 2050ஆம் ஆண்டு வரையிலான வளர்ச்சித் திறனைக் கருத்தில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சபரிமலை மாஸ்டர் பிளான், சபரிமலை, பம்பா, பாரம்பரிய பாதை மற்றும் நிலக்கல் ஆகியவற்றின் விரிவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. அதன்படி, சீரான பயண வசதிகள், வாகன நிறுத்துமிடம், சுத்தமான நீர் கிடைப்பது, சுகாதார வசதிகள், ஓய்வு மையங்கள், மருத்துவ வசதிகள் போன்றவற்றின் தேவை உள்ளது. இவை இயற்கையின் அழகை சேதப்படுத்தாமல் மற்றும் சுற்றுச்சூழலை சேதப்படுத்தாமல் செய்யப்பட வேண்டும். இதன் ஒரு பகுதியாக எருமேலி உள்ளிட்ட ருகிலுள்ள பகுதிகளையும் உருவாக்க வேண்டும். ரூ.778.17 கோடி சபரிமலை சன்னிதானத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மதித்து வடிவமைப்பு (லே அவுட்) தயாரிக்கப் பட்டுள்ளது. சபரிமலை சன்னிதானத்தின் வளர்ச்சிக்கான மொத்த செலவு ரூ. 778.17 கோடி என வடிவமைப்பு மதிப்பிடுகிறது, இதில் 2022-2027 வரையிலான முதல் கட்டத்திற்கு ரூ. 600.47 கோடி, ரூ. 2028-2033 வரையிலான இரண்டாம் கட்டத்திற்கு ரூ. 100.02 கோடியும், 2034-2039 வரையிலான மூன்றாம் கட்டத்திற்கு ரூ. 77.68 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரைக்கான போக்கு வரத்து முகாமாக பம்பாவை வடி வமைப்புத் திட்டம் கருதுகிறது. பக்தர்கள் சன்னிதானத்திற்குச் சென்று வரு வதற்கான குறிப்பிட்ட சுழற்சி வழியைப் பின்பற்றுவதை உறுதிசெய்யவும், இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெரிசலைத் தவிர்க்கவும் இந்த அணுகு முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடி வமைப்புத் திட்டத்தின்படி, பம்பாவின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.207.48 கோடி சேர்க்கப்பட்டுள்ளது, இதில் 2022-2027 முதல் கட்டமாக ரூ.184.75 கோடி யும், 2028-2033 வரை இரண்டாம் கட்டமாக ரூ.22.73 கோடியும் அடங்கும், மேலும் 2022-2025 முதல் முதல் கட்டமாக ரூ.32.88 கோடியும், 2024-2026 வரை இரண்டாம் கட்டமாக ரூ.15.09 கோடியும் உட்பட மொத்தம் ரூ.47.97 கோடி மலை யேற்றப் பாதை மேம்பாட்டிற்காக சேர்க்கப் பட்டுள்ளது. பம்பா நதியின் குறுக்கே... வடிவமைப்புத் திட்டங்களின்படி சன்னிதானம், பம்பா மற்றும் மலையேற்றப் பாதை மேம்பாட்டிற்கான மொத்த செலவு ரூ.1,033.62 கோடி. சபரிமலை மாஸ்டர் பிளானில் சேர்க்கப்பட்டுள்ள சபரிமலை யாத்ரீகர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2025-2030 காலகட்டத்தில் ரூ.314.96 கோடி மதிப்புள்ள திட்டங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. பம்பா நதியின் குறுக்கே பம்பா கணபதி கோவிலிலிருந்து பம்பா மலை உச்சி வரை பாதுகாப்பு பாலம் கட்டுதல், நிலக்கல் இடைநிலை நிலை யத்தில் மையப் பகுதியை மேம்படுத்துதல், குன்னாரிலிருந்து சபரிமலை சன்னி தானத்திற்கு குடிநீர் குழாய் அமைத்தல், நிலக்கல் இடைநிலை நிலையத்தில் சாலை கள் மற்றும் தொடர்புடைய பாலங்கள் அமைத்தல், சபரிமலை சன்னிதானத்தில் யாத்ரீக வசதி மையம், தந்திரி மடம் மற்றும் பிரசாத உற்பத்தி மற்றும் விநியோக வளாகம் கட்டுதல், சபரிமலை சன்னிதானத்தில் தீ அணைக்கும் அமைப்புகளை நிறுவு தல், சபரிமலை சன்னிதானத்தில் யாத்ரீகர் வெளியேறும் பாலம் மற்றும் நிலக்கல் இடை நிலை நிலையத்தில் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய வற்றுக்கான விரிவான திட்ட ஆவணத்தைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார். விழாவில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பி.கே. சேகர்பாபு, கேரள அறநிலையத்துறை அமைச்சர் வி.என்.வாசவன், கேரளத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பேசினர்.