தமிழகத்தில் ஆட்டோ, பேருந்துகள் ஓடாது நாளை நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்!
தொழிற்சங்க தலைவர்கள் அறிவிப்பு
தொழிற்சங்க தலைவர்கள் அறிவிப்பு சென்னை, ஜூலை 7 - ‘ஜூலை 9’ - அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை யொட்டி தமிழ்நாட்டில் ஆட்டோக்கள், பேருந்துகள் ஓடாது என்று தொழிற் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, கி. நடராஜன் (தொமுச), அ. சவுந்தரராஜன் (சிஐடியு), எம். ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), சேவியர் (ஐஎன்டியுசி) உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் சென்னையில் திங்களன்று (ஜூலை 7) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: கூட்டணிக் கட்சிகளின் பலத்தின் மூலம் 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள ஒன்றிய மோடி அரசு, கார்ப்பரேட் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை தொடர்கின்றது. இது நாட்டில் வறுமை யை ஆழப்படுத்துவதோடு, விரிவு படுத்துகிறது. உழைக்கும் மக்கள் மீது அடிமைத்தனத்தின் நிபந்தனை களைத் திணிப்பதற்கான ஒரு விரி வான திட்டமாக நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை முரட்டுத்தன மாக திணிக்கும் முயற்சி நடக்கிறது. ‘தொழில் செய்வதை எளிதாக்கு தல்’ என்ற பெயரில் பல தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக பெருநிறுவன முதலாளிகள் செய்து வரும் குற்றங்கள் குற்றமற்ற தாக்கப்படுகின்றன. பாசிச நோக்கத்துடன் அனைத்து வகை நிர்வாக அமைப்புகளும், சர்வாதி காரமய மாக்கப்படுகிறது. யுஏபிஏ (உபா), பிஎம்எல்ஏ மற்றும் குற்றவியல் சட்டங்கள் கருத்துரிமை, மாற்றுக் கருத்துச் சொல்லும் உரிமை பறிக்கின்றனர். பொதுமக்களின் அடிப்படை ஜனநாயக அரசிய லமைப்பு உரிமைகளை கடுமையாகக் கட்டுப்படுத்துகின்றன. பிஎன்எஸ் சட்டப் பிரிவு 111-இன் படி தொழிற் சங்கங்களின் நடவடிக்கை, புகார்கள் “ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்” என்று மாற்றப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாய சட்ட விதிகளை, தேசிய விவசாய சந்தைப் படுத்தலுக்கான வரைவு கொள்கை மூலம் மீண்டும் கொண்டு வர முயற்சிக் கிறது. ‘சி2 பிளஸ் 50’ அடிப்படையில் சட்டப்பூர்வ எம்எஸ்பி (குறைந்தபட்ச ஆதார விலை) வழங்கும் வாக்குறுதி அமலாகவில்லை. நூறுநாள் வேலை திட்டம், சுகாதாரம், கல்வி போன்ற நலத்திட்டங்கள் போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. தேசியப் பொருளாதாரத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் மீது உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பை வலுவிழக்கச் செய்ய, மக்களை பிளவுபடுத்துகின்றனர். எனவே, தாராளமயக் கொள்கைக்கு மாற்றாக 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 9 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் மட்டுமின்றி, ஆசிரி யர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், பங்கேற்கின்றனர். தமிழகத்தில் உள்ள 80 சதவிகிதம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற் கின்றனர். அன்றைய தினம் மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடை பெறுகின்றன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இவ்வாறு தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.