அரசு கல்லூரியில் உதவி பேராசிரியர் பணி - 2708
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நெட்/செட் (NET /SET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் அல்லது பி.எச்.டி. (Ph.D ஆய் வுப்படிப்பு) பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு - ஜூலை 1, 2025 தேதியின்படி அதிகபட்சம் 57க்குள் இருக்க வேண்டும். தேர்வு முறை - எழுத்துத் தேர்வில் உதவி பேராசிரியர் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவு, தமிழ் மொழி திறன் தேர்வு மற்றும் பொது அறிவு கேள்விகள் கேட்கப் படும். எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம் இணையதளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. டிஆர்பி (TRB) நடத்தும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு, முது நிலைப் பட்டப் படிப்பில் பெற்றுள்ள மதிப் பெண்கள் மற்றும் ஆசிரியர் பணி அனு பவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி யானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் டிசம்பர் 20, 2025 விண்ணப்பக் கட்டணம் - இதர பிரிவினர் களுக்கு ரூ.600 மற்றும் எஸ்சி/எஸ்டி/ எஸ்சிஏ/பிடபுள்யுடி (SC/ST/SCA/ PWD) பிரிவினர்களுக்கு ரூ.300 மட்டும் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாட வாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம் மற்றும் விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விவ ரம் மற்றும் கூடுதல் விபரங்கள் அறிவிக்கை யில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறி விக்கையைப் பெற www.trb.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிட லாம். விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி நவம்பர் 10, 2025 ஆகும்.
‘பெல்’ லில் வாய்ப்பு
பொதுத்துறை நிறு வனமான “பெல்” (பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் 340 பணியிடங் களை நிரப்புவதற்கான அறி விக்கை வெளியாகியுள்ளது. பொறி யியலில் பட்டப்படிப்பு நிறைவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்க லாம். எலக்ட்ரானிஸ் பிரிவில் 175, மெக்கானிக்கல் பிரிவில் 109, கணினி அறிவியலில் 42, மின்துறையில் 14 பணியிடங் களை நிரப்புகிறார்கள். தமிழ கத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி என்று ஆறு தேர்வு மையங்கள் உள்ளன. இந்தப் பணியிட நிரப்பு தல் குறித்த கூடுதல் விபரங்களுக்கு www.bel-india.in என்ற இணையதளத்தைப் பார்வை யிடலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசித்தேதி நவம்பர் 14, 2025 ஆகும்.
உளவுத் துறையில் வேலை
மத்திய உளவுத்துறையில் தகவல்தொடர்புத்துறை யில் பொறியியல் படிப்பு அல்லது எம்.எஸ்.சி. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வந்திருக்கிறது. மொத்தம் 258 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். மத்திய உளவுத்துறையில் உதவி அதி காரி என்ற பணியிடத்தில் தேர்வு செய்யப்படுவோர் அமர்த்தப்படுவார்கள். விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் கேட் (GATE) தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசிய மாகும். அவர்களுக்கு திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படு வார்கள். இந்த வேலை வாய்ப்பு குறித்த கூடுதல் விப ரங்களுக்கு www.mha.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்குக் கடைசித் தேதி நவம்பர் 16, 2025 ஆகும்.
ரயில்வேயில் காலிப்பணியிடங்கள் -3058
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வேயில் பல்வேறு பணி களுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை(CEN 07/2025) வெளியாகி யுள்ளது. மொத்தம் 3058 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். கல்வித்தகுதி -அனைத்துப் பணியிடங் களுக்கும் 12- ஆம் வகுப்பில் குறைந்தபட்சமாக 50% பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – அனைத்துப் பணியிடங்களுக்கும் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும். 01.01.2026 ஆம் தேதிப்படி வயது கணக்கிடப்படும். அனைத்துப் பிரிவினரும். 01.01.2008க்கு பின்பாகப் பிறந்திருக்கக்கூடாது. அதிகபட்ச வயது வரம்பைப் பொறுத்தவரையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு(ஓபிசி) 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்ச்சி வழங்கப்படும். தேர்வு முறை- அனைத்துப் பணியிடங்க ளுக்கும் இரண்டு கட்டத் தேர்வு நடத்தப்படும். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். சிபிடி - 1 (CBT -1) முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெரிட் லிஸ்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர், தட்டச்சுத் திறன் தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் அசல் நகல்கள் சரிபார்ப்பு நடத்தப்படும்.தேவைப்படும் பணியிடங்களுக்கு உடற்திறன்தேர்வு நடக்கும். விண்ணப்பக் கட்டணம் – ஆண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு ரூ.500 மற்றும் பெண்கள் எஸ்சி/எஸ்டி/பிடபுள்யுடி (SC/ST/PWD) பிரிவினர்களுக்கு ரூ.250 மட்டும் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் மற்றும் கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற www.rrbchennai.gov.in. என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்பத் தொடக்கத் தேதி – அக்டோபர் 28, 2025 விண்ணப்பம் நிரப்புவதற்குக் கடைசித் தேதி நவம்பர் 27, 2025 ஆகும்.