செயற்கை நுண்ணறிவு மாநாடு துவங்கியது!
புதுதில்லி, பிப். 16 - நாட்டின் தலைநகரான புது தில்லியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடும் கண்காட்சியும் துவங்கி யுள்ளன. சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பதை இலக் காகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில், கூகுள், ஓபன் ஏஐ, மைக்ரோசாப்ட் என செயற்கை நுண்ணறிவுத் துறை யில் கோலோச்சும் முக்கிய நிறு வனங்களின் தலைவர்கள், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானு வேல் மக்ரான் உள்ளிட்ட 20 நாடு களின் தலைவர்கள் பங்கேற்கின்ற னர். பிப்ரவரி 20 வரை நடைபெற வுள்ள இந்த உச்சிமாநாட்டை பிரத மர் மோடி, திங்கட்கிழமையன்று துவக்கி வைத்தார். அதைத்தொ டர்ந்து, செவ்வாய்க்கிழமை முதல் (பிப். 17) இந்த கண்காட்சியைக் காண பொதுமக்கள் அனுமதிக்கப்படு உள்ளனர். ஆஸ்திரேலியா, ஜப்பான், ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உட்பட 13 நாடுகளின் அரங்குகள் இந்தக் கண் காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த உச்சி மாநாடானது, மக்கள் (People), பூமி (Planet) மற்றும் முன்னேற்றம் (Progress) என மூன்று முக்கிய கருப்பொருள்களின் கீழ் நடத்தப்படுகிறது. மொத்தம் 300-க்கும் மேற்பட்ட அரங்குகள், நேரடி விளக்கக் காட்சிகள், 600 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாநாட்டில் இடம்பெற்றுள்ளன. உலகளாவிய செயற்கை நுண் ணறிவு வளர்ச்சி, சூழல் உள்ளிட்ட வற்றைப் புரிந்துகொள்ளவும், புதிய வணிக வாய்ப்புகளை உரு வாக்கவும் ஒரு சிறந்த தளமாக இம்மா நாடு அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
