tamilnadu

img

ஆரோக்கியநாதபுரம் நில மோசடி :ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

ஆரோக்கியநாதபுரம் நில மோசடி :ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் 

திருநெல்வேலி, மார்ச் 6 - நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டை வட்டம், ஆரோக்கியநாதபுரம் கிராமத்தில் வசிக்கும் 250 தலித் கிறித்த வக் குடும்பங்களின் வாழ்வாதாரமான விவசாய நிலங்களை, போலி ஆவணங் கள் மூலம் தனியார் நிறுவனம் அபக ரித்துள்ள விவகாரத்தில் தமிழக அரசு உட னடியாகத் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இந்த நில மோசடிக்கு உடந்தை யாகச் செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சியின் மாவட்டக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. 50 ஆண்டுகால விவசாய நிலமும் நில அபகரிப்பும் ஆரோக்கியநாதபுரம் கிராம மக்க ளுக்கு 1967-ஆம் ஆண்டு ரயத்துவாரி ஒழிப்பு முறையின் கீழ் தமிழக அரசு நிலங்களை வழங்கியது. இதற்கான ‘ஒப்படைப்பு ஆவணங்கள்’ (Assignment records) மக்களிடம் உள்ளன. இதன்படி, வி.எம். சத்திரம் புல எண் 86/1-ல் உள்ள 87 ஏக்கர் நிலத்தை 10 நபர்களும் அவர்களது வாரிசுகளும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், 2007-ஆம் ஆண்டு  பீமா ராஜா என்பவர் சில வாரிசுதாரர்களி டம் மட்டும் பொது அதிகார ஆவணம் பெற்று 29.5 ஏக்கர் நிலத்தைக் கிரயம்  செய்துள்ளார். ஆனால், எவ்வித ஆவ ணமும் இன்றி 66 ஏக்கர் நிலத்திற்குத் தனது பெயரைப் பட்டாவில் மோசடி யாகச் சேர்த்துள்ளார். இதனை எதிர்த்து மக்கள் நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக, ஆர்.டி.ஓ நீதிமன்றமும் உயர்நீதிமன்றமும் அந்த மோசடி பட்டாக்களை ரத்து செய்ய உத்தரவிட்டன. இருப்பினும், வருவாய்த்துறை அதி காரிகள் அந்த உத்தரவுகளை அமலாக்கா மல் கிடப்பில் போட்டனர். போலி ஆவணங்கள் மூலம் 107 ஏக்கர் பத்திரப்பதிவு இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ‘ஜோன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், பீமா ராஜாவிடமிருந்து போலி ஆவணங்கள் மூலம் 107 ஏக்கர் நிலத்தைப் பத்திரப்பதிவு செய்துள்ளது. உண்மையில் அந்தப் புல எண்ணில் (86/1) இருப்பது 87 ஏக்கர் நிலம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 5.8 ஏக்கர் குளம், இடுகாடு மற்றும் பொது வழித்தடங்களும் அடங்கும். அந்த நிறு வனம் ரவுடிகளின் துணையுடன் 86  ஏக்கர் நிலத்தைச் சுற்றி 10 அடி உயரத்தி ற்கு மதில் சுவர் அமைத்து ஆக்கிரமித்துள் ளது. இந்த நிலத் தகராறில் ஏற்கெனவே ஒரு கொலைச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதிகாரிகளின் துணையுடன் நடந்த மோசடி இந்த நில ஆக்கிரமிப்பை எதிர்த்து  சிபிஐ(எம்) சார்பில் கடந்த இரண்டு ஆண்டு களாகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் பட்டன. 2024 அக்டோபரில் நடை பெற்ற காத்திருப்புப் போராட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.ஓ. விசார ணைக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, 2025 ஜனவரி 19- அன்று பாளை யங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி என்பவர் 414 தனிப்பட்டாக்களை அந்தத் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். உயர் அதிகாரிகளின் விசாரணை யில் இருக்கும்போது தன்னிச்சையாகப் பட்டா வழங்கிய வட்டாட்சியர் மற்றும் சர்வேயர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மீண்டும் போராட்டம் நடத்திய 500-க்கும் மேற்பட்ட சிபிஐ(எம்) தோழர்கள் கைது செய்யப்பட்டனர். வருவாய்த்துறையின் ஒருதலைப்பட்சமான முடிவு கடந்த பிப்ரவரி 23, 2026 அன்று டி.ஆர்.ஓ வழங்கிய தீர்ப்பில், மோசடியாக வழங்கப்பட்ட 414 தனிப்பட்டாக்கள் குறித்தோ அல்லது நில அபகரிப்பு குறித் தோ எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல், “உரிமையியல் நீதிமன்றத்திற்குச் சென்று பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள்” எனக் கூறி அதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையில் முடிவெடுத்துள்ளார். நெல்லை மாநகராட்சியில் இந்த நிலத் தாவா காரணமாகக் காலி மனை வரி வசூலிக்கும் தீர்மானம் ஒத்திவைக்கப் பட்டுள்ள நிலையில், 250 விவசாயக் குடும்பங்கள் தங்கள் நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுப் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசுக்கு வேண்டுகோள் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த மெகா நில மோசடிக்கு முன்னின்று  உடந்தையாகச் செயல்பட்டு வருகின்ற னர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் விடுத்துள்ள அறிக்கையில்  குற்றம்சாட்டப் பட்டுள்ளது. எவ்வித ஆவணமும் இன்றி ஏழை மக்களின் நிலத்தைப் பறிக்கத் துணை நின்ற அதிகாரிகள் மீது சட்டரீதி யான நடவடிக்கை எடுத்து, ஆரோக்கிய நாதபுரம் கிராம மக்களின் நில உரிமை யை மீட்டெடுக்கத் தமிழக அரசு உடன டியாக முன்வர வேண்டும் என மாவட்டக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.