tamilnadu

img

வரவேற்புக்குழு அலுவலகம் திறப்பு - இலச்சினை வெளியீடு!

மதுரை, ஜன. 16 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக ஆயிரம் பேர் கொண்ட வரவேற்புக்குழுவும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத் திறப்பு விழா மற்றும் மாநாட்டு இலச்சினை வெளியீட்டு விழா ஜனவரி  16 அன்று மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தில் உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தலைமை வகித்தார். வரவேற்புக்குழுச் செயலாளர் சு. வெங்கடேசன் எம்.பி. வரவேற்றுப் பேசினார்.  மதுரை தீக்கதிர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு வரவேற்புக்குழு அலுவலகத்தை, வரவேற்புக்குழுத் தலைவரும், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.  மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநாட்டு  இலச்சினையை வெளியிட்டார்.  நிகழ்ச்சியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன், மதுக்கூர் இராமலிங்கம், எஸ். கண்ணன், கே.சாமுவேல்ராஜ், டி. ரவீந்திரன், என். பாண்டி, செ. முத்துக்கண்ணன், கே. அர்ஜூனன், க. சுவாமிநாதன், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ. லாசர், இரா. விஜயராஜன், ஆர். பத்ரி, எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ். பாலா, எஸ்.பி. ராஜேந்திரன், எம். கண்ணன், ஜி. ராணி மற்றும் மதுரை மாநகர துணை மேயர் தி. நாகராஜன் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வர்க்கச் சுரண்டலை அடக்கும் வீரர்கள்!

மாநாட்டு இலச்சினையை வெளியிட்டு, மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசினார். அப்போது, ‘ஏறு தழுவுதல்’ என்று சொல்லக்கூடிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. காளைகளை அடக்குவது வீரத்தின் அடையாளம் என்று சொன்னால், கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரை வர்க்கச் சுரண்டலை அடக்குவது, ஏகாதிபத்தியத்தை அடக்குவது, முதலாளித்துவத்தை அடக்குவது என்று எண்ணற்ற செயல்களை கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள். வரக்கூடிய காலத்திலும் இதனை செய்வதற்கான வியூகத்தை, உத்தியை வகுப்பதற்காகவே மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும். இனிமேல் பேசுவதற்கான நேரமில்லை. ஆக்சனுக்கான நேரம் தான். செயல்பாட்டுக்கான நேரம் இது. நாம் அனைவரும் சேர்ந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவோம்” என்றார்.

மனு கல்லிகாட்டிற்கு தலைவர்கள் பாராட்டு

சிபிஎம் அகில இந்திய 24-ஆவது மாநாட்டு இலச்சினையை இங்கி லாந்தில் வசிக்கும் மலை யாள கலைஞரான மனு கல்லிகாட் வடிவமைத் திருந்தார். இந்நிலையில் இலச்சினை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது, மனு கல்லிகாட்டிற்கும், அதன் தமிழ் வடிவத்தை அளித்த வசந்த், ஆதவன் தீட்சண்யா ஆகியோருக்கும் தலை வர்கள் நன்றியும், பாரா ட்டும் தெரிவித்தனர்.