tamilnadu

img

பாம்புகள் பற்றிய விழிப்புணர்வுக்காக செயலிகள் - சிதம்பரம் ரவிச்சந்திரன்

பாம்புக்கடியால் ஆண்டுதோறும் 120 முதல் 150 பேர் வரை உயிரிழந்த கேரளாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக இதன் மூலம் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதுக்கும் குறைவாக மாறியுள்ளது. பாம்பு கடிக்கக் கூடிய வாய்ப்பு குறைந்ததும் கடிபட்டவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடிந்ததுமே இதற்கு காரணம். இந்த மாற்றத்திற்கு வழிவகுத்தது சர்ப்ப (sarppa), ஸ்நேக் பீடியா (snakepedia) ஆகிய மொபைல் செயலிகள் மற்றும் ஸ்நேக்ஸ் ஆஃப் கேரளா (snakes of Kerala id), வெஸ்ட் வாட்ஸ் ஆப் குழுக்களுமே. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேரள வனத்துறை  இந்த செயலியை தொடங்கியது. இப்போது ஒடிசா,  தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் இதே போன்ற  ஒன்றை வடிவமைத்து வருகின்றன. கேரளாவில் இந்த  செயலியை இதுவரை அரை லட்சம் பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர். இதில் பாம்புகளை பிடித்து அவற்றை  அவற்றின் இயற்கை வாழிடங்களுக்கு கொண்டுபோய்  விடுவதற்குரிய பயிற்சி பெற்ற பல தன்னார்வலர்கள் உள்ளனர். இவர்களின் மொபைல் நம்பர்களும் இந்த செயலி யில் உட்படுத்தப்பட்டுள்ளன. அச்சுறுத்தும் வகையில்  பாம்பை எங்கேயாவது பார்க்க நேர்ந்தால் இந்த செயலி யின் மூலம் தொடர்பு கொண்டால் மீட்புக் குழுவினர் அங்கு வந்து பாம்பை பிடித்துச் செல்வர். செயலி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குள் 30,874  பேர் இதில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டுள்ள னர். 34,559 பாம்புகள் இந்த செயலியின் உதவியுடன் பிடிக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்டவற்றில் 266 பாம்புகள் ராஜநாகம் வகையைச் சேர்ந்தவை. 7566 கொம்பேறிமூக்கன் பாம்புகள். 23 கண்ணாடிவிரியன் பாம்புகள். 7163 மலைப்பாம்புகள்.'

மீட்புக்குழுவில் மருத்துவர்கள் முதல் வீட்டுப் பெண்மணிகள் வரை

இந்த செயலியில் பாம்பு பிடிக்க பயிற்சி பெற்ற  740 பேர் உள்ளனர். “தன்னார்வலர்களில் வீட்டுப் பெண்  மணிகள், ஆட்டோ தொழிலாளிகள், வழக்கறிஞர்கள், கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள், அரசு ஊழி யர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர். சொந்த வேலைகளுக்கு நடுவில் இவர்கள் ஊர்க்காரர்கள் மற்றும் பாம்புகளை மீட்க ஓடிவரு கின்றனர்” என்று செயலியின் திட்ட மாதிரி அலுவலர்  வை முகம்மது அன்வர் கூறுகிறார். இனி எல்லா வன விலங்குகளும் செயலியில் பாம்புகளுடனான மனித மோதல்களை குறைக்கும்  நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த செயலியில் இனி எல்லா வன விலங்குகளும் பங்காளிகளாக மாற  உள்ளன. காட்டு யானை, புலி, காட்டுப் பன்றி, கரடி,  காட்டு எருமை, முள்ளம்பன்றி போன்றவை மனித வாசம் இருக்கும் இடங்களில் நுழைந்தால் அது பற்றி தகவல் தந்தால் அந்த இடங்களுக்கு மீட்பு குழுவினர் அனுப்பிவைக்கப்படுவர். இதனுடன் அந்த குறிப்பிட்ட இடத்தில் இப்படி ஒரு  பிரச்சனை இருக்கிறது என்ற அறிவிப்பும் இந்த செயலி யை பதிவிறக்கம் செய்த எல்லோருக்கும் கிடைக்கும்  வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள் ளது. இது இன்னும் இரண்டு மாதங்களில் நடை முறைக்கு வரும் என்று நம்பப்படுகிறது. ஸ்நேக் பீடியா இதில் நஞ்சுள்ள, நஞ்சு இல்லாத எல்லாவிதமான பாம்புகள் பற்றிய விவரங்கள் மலையாளத்தில் கொடுக்  கப்பட்டுள்ளன. இவற்றின் பல வகை புகைப்படங்கள் இந்த செயலியில் உள்ளன. இதை ஒரு இலட்சம் பேர்  பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இதன் மூலம் பாம்புகளைப் பற்றி கூடுதலாக அறிய, எந்தெந்த பாம்புகள் ஆபத்தானவை என்று  தெரிந்துகொள்ள, அவற்றை காணும்போது அடையா ளம் காண இது உதவுகிறது. பாம்பை பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதால் இந்த  உயிரினங்களின் நுணுக்கமான விவரங்கள் இந்த செயலியின் மூலம் கிடைக்கிறது. அவசர சிகிச்சை வாட்ஸ் ஆப் குழு கடித்த பாம்பின் படம் அல்லது எப்போதேனும் அதை உயிருடன் பிடித்தது பற்றிய தகவல்களுடன் பலர் மருத்துவர்களை சந்திக்கின்றனர். அப்போது மருத்துவர்களுக்கு பாம்பை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க இந்த வாட்ஸ் ஆப் குழு பெரிதும் உதவுகிறது. இதில் முக்கியப்பங்கு வகிப்பது ஸ்நேக்ஸ் ஆஃப் கேரளா ஐ டி வெஸ்ட். வன உயிரினங்களை பாதுகாக்கவும் மனித உயிரி ழப்புகளை தடுக்கவும் மனித- பாம்பு மோதலை குறைக்கவும் நவீன தொழில்நுட்பத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என்பதற்கு கேரள  அரசின் இந்த முயற்சி உலகிற்கே ஒரு தலைசிறந்த முன்  மாதிரி.