புதுதில்லி, நவ.9- உலகளவில் மிகவும் மாசு அதிக முள்ள நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக 2-ஆவது இடத்தில் இருப்பது, இந்தியாவின் தலைநகா் தில்லியில் தான். அந்த வகையில் காற்று மாசு, தில்லியில் தற்போது மீண்டும் மோசம் அடைந் துள்ளது. தீபாவளிக்குப்பின் ஒன்பதாவது நாளாக நகரின் பல பகுதிகளில் புகை மூட்டம் காணப்பட்டதால், தில்லியின் காற்றின் தரம் தொடர்ந்து ‘மிகவும் மோச மான பிரிவில்’ உள்ளது. சனிக்கிழமை யன்று காலை 8 மணி நிலவரப்படி காற் றின் தரநிலை 360 ஆக பதிவாகி யிருந்தது. தில்லியின் பிற முக்கியப் பகுதி களில், பவானா 409, அலிபூர் 387, ஆனந்த் விஹார் 393, துவாரகா செக்டார் 8-இல் 362, ஐஜிஐ விமான நிலையம் 344, தில்சாத் கார்டன் 220, ஐடிஓ 359, முண்ட்கா 359, நஜாப்கார்ஹெச் 379, நியூ மோதி பாக் 411, பட்பர்கஞ்ச் 389, ஆர்கே புரம் 376 மற்றும் வஜீர்பூர் 399 என பதிவாகியுள்ளது. தலைநகரில் புகழ்பெற்ற சுற்று லாத் தலங்களில் ஒன்றான அக்ஷர்தாம், உத்தரப் பிரதேசத்தின் பல முக்கிய பகுதிகளுடன் தில்லியை இணைக்கும் முக்கிய வழித்தடங்களில் காற்றின் தர நிலை 393 ஆக உள்ளது. குறிப்பாக, ஆனந்த் விஹாரில் குடி யிருப்புவாசிகள் மற்றும் வெளியூர் பய ணிகள் பல்வேறு உடல்நலப் பிரச்சனை களை எதிர்கொண்டு வருகின்றனர். சுமார் 10 நிமிடம் இப்பகுதியில் நின் றாலே கண் எரிச்சலை உளவுப்பூர்வ மாக உணர முடிகிறது. சுவாசக் கோளாறு, மூக்கு ஒழுகுதல், தும்மல், இருமல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, குழந்தைகள் அதிகள வில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே, மாசு அளவு ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டிய போதெல்லாம் பள்ளிகளை மூடுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், மாணவர்களின் நலன் கருதி தற்போதும் பள்ளிகளை அரசு உடனடியாக மூட வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் நிகில் மோடி தெரிவித்துள்ளார்.