மக்கள் விரோத ஒன்றிய அரசு – அகில இந்திய பொது வேலை நிறுத்தம்
சேலம், பிப்.12- ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் மக் கள் – தொழிலாளர் – விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து, நாடு முழுவதும் விவசாயிகள் முன் னணி, மத்திய தொழிற்சங்கத்தினர் ஆவேச மறியலில் ஈடுபட்டு கைதாகி னர். தொழிலாளர்களை அடிமையாக் கும் நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். விவசாயி களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அமல்படுத்த வேண்டும். மர பணு மாற்றம் செய்யப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட விதைகளை இந்தியா விற்கு பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் இறக்குமதி செய்து விற்பனை செய்வ தற்கு வழிவகுக்கும் விதைகள் மசோதா 2025 கைவிட வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற ஊரக வேலை உறு தித் திட்ட உரிமைகளை பறிக்கக்கூ டாது. அணு உற்பத்தி துறையை தனி யாருக்கு வழங்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மதவெறியை தூண்டி மக்களை பிளவு படுத்தும் பாஜக கூட்டணி அரசை கண்டித்து நாடு முழுவதும் பிப்.12 ஆம் தேதியன்று பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் நடைபெறும் என மத் திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசா யிகள் முன்னணி அறிவித்தன. அதன்படி, சேலம் கோட்டை மைதா னத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு சிஐடியு மாவட்டத் தலைவர் உதய குமார் தலைமையில் மறியல் நடைபெற் றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.கோவிந் தன், எல்பிஎப் மாவட்ட நிர்வாகிகள் பொன்னி.பழனியப்பன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் சம்பத், ஐஎன்டி யுசி நிர்வாகி நடராஜன், எச்எம்எஸ் நிர்வாகி கணேசன், யூடியூசி ராஜேந்தி ரன் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டு கைதாகினர். இதேபோன்று, சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, வாழப் பாடி, அயோத்தியப்பட்டினம், ஓம லூர், எடப்பாடி, பனமரத்துப்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் அன்பழகன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.தங்க வேல், மாவட்டச் செயலாளர் எஸ்.கே. சேகர், மாவட்டத் தலைவர் கணபதி, சிபிஐ மாவட்டச் செயலாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் தில், சிஐடியு பஞ்சாலை சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சி.பத்மநாபன், சிஐ டியு அரசு விரைவு போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநிலச் செயலாளர் கனக ராஜ், எல்பிஎப் நிர்வாகி தமிழ்ச்செல் வன், எச்எம்எஸ் மாநிலச் செயலாளர் டி.எஸ்.ராஜாமணி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகி சி.தங்கவேல், ஏஐசிசிடியு நிர்வாகி பால சுப்பிரமணியன், ஐஎன்டியுசி நிர்வாகி சண்முகம் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். இதேபோன்று, பெரிய நாயக் கன்பாளையம், பொள்ளாச்சி, மேட்டுப் பாளையம், அன்னூர், சூலூர் உள் ளிட்ட பகுதிகளில் மறியல் நடைபெற் றது. இதில், சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் வேலுசாமி, எச்எம்எஸ் மாநில துணைத்தலைவர் மனோகரன், விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தலைவர் வி.பி.இளங்கோவன் மற்றும் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், விச, விதொச நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். ஈரோடு ஈரோடு காளை மாட்டு சிலை அருகே இருந்து துவங்கிய பேரணி, ரயில் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடைபெற்ற மறியலில் சிஐடியு அகில இந்திய துணைச்செய லாளர் மாலதி, மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணின், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் எஸ்.சின்னசாமி, எல்பிஎப் நிர்வாகி எஸ்.கோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி சி.எம்.துள சிமணி, எச்எம்எஸ் நிர்வாகி ரமணி, ஐஎன்டியுசி நிர்வாகி என்.துரைசாமி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர் வாகி கி.வெ.பொன்னையன், எம்எல்எப் நிர்வாகி காளிமுத்து, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் கே.ஆர்.விஜயராகவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோபிசெட்டி பாளையத்தில் நடைபெற்ற மறிய லுக்கு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். இதில் சிஐடியு நிர்வாகி ஜோதிமணி மற்றும் மத்திய தொழிற் சங்க நிர்வாகிகள் பாலகுமார், கிருஷ் ணமூர்த்தி, குமாரசாமி, பரமேஸ்வரன், முத்துகுமாரசாமி மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பெருந்திர ளானோர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பிருந்து துவங்கிய பேரணி, தலைமை தபால் நிலையம் முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து நடை பெற்ற மறியலுக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.நாகராசன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுனன், மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ஜெயா, மலைவாழ் மக்கள் மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன் மற்றும் எல்பிஎப் மாவட்டச் செயலாளர் சண்முக ராஜா, தலைவர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் சுதர்சனம், ஐஎன்டியுசி மாவட் டத் தலைவர் சிவலிங்கம், ஏஐசிசிடியு மாவட்ட நிர்வாகி ராகுல் டிராவிட் உட்பட எண்ணற்றோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பாலக்கோடு, பொம் மிடி ரயில் நிலையம், பென்னாகரம், அரூர் உள்ளிட்ட பகுதிகளில் நடை பெற்ற மறியலில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபா லன், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.கலா வதி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து, எல்பிஎப் மாவட்டத் தலைவர்கள் யுவ ராஜ், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சி.முருகன், விசிக மாநில கருத்தியல் செயலாளர் பொ.மு.நந்தன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல் லிகா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மா.குரளரசன், சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சண்முகம், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். திருப்பூர் திருப்பூரில் தியாகி குமரன் நினை வகம் முன்பிருந்து தொழிலாளர்கள் ஊர்வலமாக கோரிக்கை முழக்கம் எழுப்பியபடி, திருப்பூர் ரயில் நிலைய தெற்குப் பகுதியில் உள்ள கிழக்கு வாயில் அருகே சென்றனர். காவல் துறையினர் ரயில்நிலைய நுழைவா யிலை அடைத்து வைத்து, மறியலுக்கு வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஊத்துக்குளி சாலை, ரயில்வே மேம்பாலம் சாலை சந்திப் பில் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐஎன்டி யுசி தலைவர் வி.ஆர்.ஈஸ்வரன் தலை மையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், எச்எம்எஸ் மாவட்டச் செயலா ளர் ஆர்.முத்துசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மத்திய தொழிற்சங்கங்களை சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இதேபோன்று, மாவட்டத்தில் அவி நாசி, ஊத்துக்குளி, உடுமலை, பல்ல டம், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மறியலில் கலந்து கொண்ட திரளானோரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் நாமக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்ற மறியலுக்கு, சிஐடியு மாவட் டச் செயலாளர் என்.வேலுச்சாமி, ஐஎன் டியூசி மாவட்டச் செயலாளர் பழனி வேல், ஏஐசிசிடியூ மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இதில் சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், ஏஐடி யூசி மாநிலச் செயலாளர் முருகராஜ், எம்எல்எப் மாநிலச் செயலாளர் ரங்க சாமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் சரவணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தங்கராஜ், மாதர் சங்க மாவட் டச் செயலாளர் செல்வராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம், குமாரபாளை யம், திருச்செங்கோடு, ராசிபுரம் உள் ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப் பாட்டங்களில், விவசாயிகள் சங்க மாநி லச் செயலாளர் பி.பெருமாள், விவசா யத் தொழிலாளர் சங்க மாநிலப் பொரு ளாளர் பழனிச்சாமி, மாவட்டத் தலை வர் சி.துரைசாமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி திடல் முன்பு சிஐடியு மாவட்டப் பொரு ளாளர் நவீன் சந்திரன், எல்பிஎப் கவுன் சில் செயலாளர் ஜெயராமன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் மூர்த்தி ஆகி யோர் தலைமையில் மறியல் நடைபெற் றது. இதில் பென்சனர் சங்க மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், போக்குவ ரத்து சங்க செயலாளர் கணேஷ், அங் கன்வாடி சங்க மாவட்டச் செயலாளர் சசிகலா, எல்பிஎப் நிர்வாகிகள் ஆனந்த், கணேஷ் ஆகியோர் கண்டனவுரையாற் றினர். இதில் மாதர் சங்க நிர்வாகி தமிழ் மணி, வாலிபர் சங்க நிர்வாகி கணேஷ், விதொச மாவட்டத் தலைவர் ராஜரத்தி னம், எல்பிஎப் துணைத்தலைவர் சிவக் குமார், மின்வாரிய ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவர் மைக்கேல், இ-சேவை தொழிலாளர் சங்க தலைவர் ஜேம்ஸ் உட்பட திரளானோர் கலந்து கொண்ட னர். முடிவில், மின்வாரிய சங்க செயலா ளர் ரமேஷ் நன்றி கூறினார். குன்னூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர் வினோத் தலைமையில் மறியல் நடைபெற்றது. இதில் எல்பிஎப் பொறுப்பாளர் சுரேஷ், ஐஎன்டியுசி மாவட்ட நிர்வாகி ராமலிங் கம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு கைதா கினர். இதேபோன்று, மஞ்சூர், எருமாடு, கோத்தகிரி, பந்தலூர், கூடலூர் உள் ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மறிய லில் பலர் கலந்து கொண்டனர்.
