விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறியல் 500-க்கும் மேற்பட்டோர் கைது
விழுப்புரம், பிப்.12- விழுப்புரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து சிஐடியு மாநிலத் துணைச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆ.சௌரிராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, தலைவர் ஆர்.சேகர், பொருளாளர் மலர்விழி, மாவட்டத் துணைத் தலைவர் பி.குமார், தொமுச தலைவர் சேகர், செயலாளர் கிருஷ்ணன், எச்எம்எஸ் சிவக்குமார், விடுதலை தொழிலாளர் முன்னணி சரவணன் உட்பட அனைத்துத் தோழமை தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களைத் தமிழ்நாடு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
