புதுச்சேரியில் ஒன்றிய அரசைக் கண்டித்து 9 மையங்களில் மறியல் போராட்டம்
புதுச்சேரி, பிப்.12- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து புதுச்சேரியில் 9 மையங்களில் எழுச்சிமிகு மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி உற்பத்தியில் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்ட மாற்றங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. மேலும், வரைவு விதை மசோதா மற்றும் மின்சாரத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், புதுச்சேரி அரசு பொதுத்துறை மற்றும் கூட்டுறவு நிறுவன ஊழியர்களின் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், அமைப்புசாரா தொழி லாளர் நலவாரியத்திற்கு நிதி ஒதுக்கி முழுமையாகச் செயல் படுத்த வேண்டும் மற்றும் ரேஷன் கடைகளைத் திறந்து அத்தியா வசியப் பொருட்களை வழங்க வேண்டும் என்றும் போராட்டக் காரர்கள் வலியுறுத்தினர். புதுச்சேரி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாநிலக்குழு ஒருங்கிணைப்பாளர் வெ.பெருமாள், மாநிலச் செய லாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் கலியமூர்த்தி, சத்தியா, சிஐடியு மாநில நிர்வாகி கள் ராமசாமி, மதிவாணன், மணி பாலன், மணவாளன், விஜயகுமார், அழகர்ராஜ், வீரமணிகண்டன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் அந்தோனி, எல்பிஎப் மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். பாகூர் அதேபோல், பாகூர் மாதா கோவில் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வன், சிபிஎம் இடைக் கமிட்டி செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அரியாங்குப்பம், வில்லி யனூர், திருக்கனூர், திருபு வனை, சேதராப்பட்டு, நெட்டப் பாக்கம், காரைக்கால் ஆகிய 9 மையங்களிலும் சிஐடியு, ஏஐடி யுசி, ஐஎன்டியுசி, தொமுச உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்க ளின் தலைவர்கள் மற்றும் தொழி லாளர்கள் மறியலில் ஈடுபட்டுக் கைதானார்கள். கைதானவர்களைப் போலீசார் பின்னர் விடுவித்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக எல்ஐசி மற்றும் பொதுத்துறை வங்கி ஊழியர்களும் வேலையைப் புறக்கணித்துப் புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள இந்தியன் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
