கடலூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் ரயில் மறியல்; 2,500-க்கும் மேற்பட்டோர் கைது
கடலூர், பிப்.12- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்பு களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. கடலூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனி வேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நைனார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலை யத்தில் நடைபெற்ற மறியலில் விவ சாய சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் ஜி.மாதவன், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் வி.சரவணன், ஏஐடியுசி மாநிலக் குழு உறுப்பினர் பி.துரை, மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, குளோப், யூ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.சம்பந்தம், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.சாந்தகுமாரி, மாவட்ட இணைச் செயலாளர் கே.ஸ்டாலின் உள்ளிட்ட 609 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமாக நடை பெற்றன. பண்ருட்டியில் ஆர்.உத்ராபதி தலைமையில் கிருஷ்ணன், லோகநாதன் உள்ளிட்ட 230 பேரும், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் பொதுச்செயலாளர் எஸ்.திருஅரசு தலைமையில் 260 பேரும் கைதாகினர். வடலூரில் விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சரவணன் தலைமையில் 250 பேரும், விருத்தாசலத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.ஆர்.ஆர்.ஜீவானந்தம் தலைமையில் 250 பேரும் மறியலில் ஈடுபட்டனர். மேலும், வேப்பூரில் விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜி.ரவிச் சந்திரன் தலைமையில் 150 பேர், திட்டக்குடியில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 220 பேர், திருமுட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ் தலைமையில் 140 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டு மன்னார்கோயிலில் மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா தலை மையில் 150 பேரும், புவனகிரியில் சிஐடியு மாவட்ட இணைச் செயலாளர் வி.சுப்பராயன் தலைமையில் 150 பேரும், சிதம்பரத்தில் விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் 200 பேரும் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். மாவட்டம் முழுவதும் 11 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 2500 பேர் கைது செய்யப்பட்டனர்.
