tamilnadu

வாய்ப்பு வாசல்

BOB யில்  418  காலிப்  பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான Bank of Baroda வில்  418 காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு விண்ணப்பம் வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் Computer Science / IT / Electronics / Electronics & Communication போன்ற ஏதேனும் ஒரு துறையில் B.E / B.Tech முடித்தவர்களாக இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு  மட்டும் M.E / M.Tech / MCA தகுதியும் ஏற்றுக்கொள்ளப்படும். அதிகாரி, மேலாளர், முதுநிலை மேலாளர் என பதவிகளுக்கு ஏற்ப வயது வரம்பு 22 முதல் 37 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC / ST / OBC / மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படும். தேர்வு முறையாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பொது / EWS / OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.850 ஆகவும், SC / ST / மாற்றுத் திறனாளிகள் பிரிவினருக்கு ரூ.175 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விபரங்களை www.bankofbaroda.bank.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.  விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19, 2026.

தபால் துறையில் 28,636 பணிகள்

GDS என்று அழைக்கப்படும் கிராமின் டாக் சேவக்(கிராமப்புற தபால் ஊழியர்) பணியில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 636 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,019 பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களில் Branch Post Master(BPM), Assistant Branch Post Master(ABPM), Dak Sevak ஆகிய மூன்று வகையான பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படிப்போடு, அடிப்படைக் கணினி பயிற்சி பெற்றிருத்தல் அவசியமாகும்.  BPM - தேர்வு செய்யப்படுபவர்கள் தபால் நிலையத்தின் பொறுப்பாளராகச் செயல்படுவார். கோப்புகள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் கையாள வேண்டியிருக்கும். தபால்துறை வங்கிப் பணிகளும் இருக்கும். ABPM - தபால் தலைகள் மற்றும் பொருட்களை விற்பனை செய்வது, நிலையத்தின் பகுதிகளில் குடியிருப்ப வர்களின் வீடுகளுக்கே சென்று அவர் களுக்குரிய சேவைகளைச் செய்வது உள்ளி ட்ட பணிகள் இவர்களுக்கு இருக்கும். Dak Sevak - தபால் நிலையப் பணிகளில் மேற்கூறிய இரண்டு பணிகளையும் செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியது இவர்களின் பணியாகும். வயது வரம்பு - 18 வயது முதல் 40 வயது வரையில் இருக்க வேண்டும். பட்டியலின, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு ஒன்றிய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்ச்சி இருக்கும். பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிப் பவர்கள் குறைந்தபட்ச கட்டமைப்பு வசதிகளைக் கொண்டவராக இருக்க வேண்டும். அந்தக் கட்டமைப்பு வசதிகள், பிரிவு வாரியான ஊதியம் உள்ளிட்ட விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது. அந்த அறிவிக்கையை www.indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணைப்பைப் பயன்படுத்திப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 16, 2026 ஆகும்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பல பணிகள்   - 933 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட  பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான தேர்வு அறிவிக்கை தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 933  பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். எந்தெந்தப் பணியிடங்களுக்கு எவ்வளவு காலிப்பணியிடங்கள், தேர்வு முறை உள்ளிட்டவை அறிவிக்கையில் தரப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணையும் இணைத்துள்ளார்கள். இந்த அட்டவணையின்படி, ஒன்றிய அரசுப் பணியாளர் ஆணையம் நடத்தும் முதல் கட்டத் தேர்வு மே 24, 2026 அன்று நடைபெறும். இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கான முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 21, 2026 அன்று நடத்தப்படும். சமூகவாரியான இட ஒதுக்கீடு ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி இருக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள 33 இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 7, காது கேளா மாற்றுத்திறனாளிகளுக்கு 11, உடல் ரீதியான பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 8, பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு 7 என்று தரப்பட்டிருக்கிறது. வயது - ஆகஸ்ட் 1, 2026 அன்று 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 32 ஆகும். பட்டியலின, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி தளர்வு இருக்கும்.  அதிகபட்சமாக எத்தனை முறை தேர்வு எழுதலாம் என்ற வரையறை உள்ளது. பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 6 முறையும், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 9 முறையும், பட்டியலின மற்றும் பழங்குடியினர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். விண்ணப்பிக்கும் முறை -  விண்ணப்பதாரர்கள் முதலில் www.upsconline.gov.in  என்ற இணையதளத்தில் ‘ஒற்றை முறை பதிவு’ (One Time Registration - ஓ.டி.ஆர்) செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் நேரடியாகத் லாகின் செய்து விண்ணப்பத்தை நிரப்பலாம். கூடுதல் விபரங்களும் மேற்கூறிய இணையதளத்தில் கிடைக்கும்.  விண்ணப்பிப்பதற்குக் கடைசித் தேதி பிப்ரவரி 24, 2026 ஆகும்.