ஓசூர்: 3 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற பிரமாண்ட மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி, பிப்.12- ஒன்றிய பாஜக அரசின் தொழி லாளர் மற்றும் விவசாயி விரோதக் கொள்கை களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்.கோபாலகிருஷ்ணன் (தொமுச), என்.ஸ்ரீதர் (சிஐடியு), மாதையன் (ஏஐடியுசி), முனிராஜ் (ஐஎன்டியுசி) ஆகியோர் தலைமை தாங்கினர். தொமுச மாநிலப் பேரவைச் செய லாளர் பி.கிருஷ்ணன், மாவட்ட நிர்வாகி கள் பசவராஜ், கிருஷ்ணமூர்த்தி, சிஐ டியு மாவட்டப் பொருளாளர் அசோக் லேலண்ட், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சுரேஷ், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம்.இலகுமய்யா, மகாலிங்கம்,ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி (சிபிஎம்),ஏஐடியுசி நிர்வாகி கள் செந்தில் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
