விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை இரண்டாம் கட்ட அகழாய்வில் சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடக்குக் கரையோரத்தில் கடந்தாண்டு முதல் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட அகழாய்வு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தங்க அணிகலன், தங்கத் தாலி, ஆண் உருவச் சுடுமண் பொம்மை, யானைத்தந்த பகடைக்காய், சுடுமண் அகல்விளக்கு, சுடுமண் வணிக முத்திரை, சுடுமண்ணால் ஆன வட்ட வடிவ தட்டு, வெள்ளை மற்றும் நீல நிறத்திலான சங்கு வளையல்கள் மற்றும் வளையல் தயாரிக்கப் பயன்படும் சுடுமண் அச்சு உள்ளிட்ட எண்ணற்ற தொன்மையான தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது சுடுமண் குடுவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.