tamilnadu

img

வெம்பக்கோட்டை: விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுப்பு!

வெம்பக்கோட்டை அகழாய்வில் விலங்கின் பல், பளிங்கு கல் உள்ளிட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 3,300 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தற்போது, சுடுமண்ணால் ஆன மனித உருவத்தின் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் கிடைத்துள்ள பல் எந்த விலங்குடையது, என்ன காலம் என்பது முழுமையான ஆய்விற்குப் பின் தெரியவரும் என்று அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.