60 ஆண்டுகளுக்கு முந்தையே அமெரிக்க அட்டூழியம்
அமெரிக்கா நீண்டகாலமாகவே காங்கோவை தனது கட்டுப்பாட்டில் வைக்கத் துடிக்கிறது. அங்கு அனைத்து விதமான தீய செயல்களையும் அரங்கேற்ற அது ஐக்கிய நாடுகள் சபையின் படைகளைப் பயன்படுத்திக் கொண்டது. காங்கோவின் தேசிய நாயகன் லுமும்பாவை அது படுகொலை செய்தது; காங்கோவின் சட்டப்பூர்வமான அரசாங்கத்தைக் கவிழ்த்தது. ‘தஷோம்பே’ எனும் பொம்மையை காங்கோ மக்கள் மீது திணித்ததுடன், அந்நாட்டின் தேசிய விடுதலை இயக்கத்தை நசுக்க கூலிப் படைகளையும் ஏவியது. இப்போது, பெல்ஜியம் மற்றும் பிரிட்டனுடன் கைகோர்த்துக்கொண்டு காங்கோவில் நேரடி இராணுவத் தலையீட்டை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கம் காங்கோவை மட்டும் கட்டுப்படுத்துவதல்ல; ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவையும் குறிப்பாகப் புதிதாக சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளை மீண்டும் அமெரிக்காவின் ‘நவீன காலனித்துவ’ வலைக்குள் சிக்க வைப்பதே ஆகும். அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு, காங்கோ மக்களின் வீரமிக்க எதிர்ப்பையும், ஆப்பிரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களின் கடும் கோபத்தையும் எதிர்கொண்டு நிற்கிறது. - தோழர் மாவோ, காங்கோ மக்களின் போராட்டத்திற்கான ஆதரவுப் பிரகடனம், டிசம்பர் 1964.
