tamilnadu

img

உண்மைக் கதையின் மறுபக்கம் - சி.ஸ்ரீராமுலு

 அமரன் திரைப்படத்தை பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும் என்கிறார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன். ஏன்? தீபாவளிக்கு வெளியாகி வெள்ளி திரையில்  ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படங்களில் பேசும் பொருளாக மாறியிருப்பது ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவ கார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருக்கும் அமரன். ஏப்ரல் 25, 2014 அன்று, காஷ்மீரின் கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் ஊடுருவினர். அப்  போது நடந்த தேடுதல் வேட்டைக்கு இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தலைமை ஏற்றார். பயங்கரவாத குழுக்களிடம் இருந்து அந்த கிராமத்தை மீட்டெடுக்க நடந்த துப்பாக்கி  சண்டை, குண்டு தாக்குதலில் முகுந்த் குழுவினர்  பலியாகினர். அல்டாப் வாணி என்ற குற்றவாளி யை பிடிக்க முகுந்த், வீரத்துடன் போராடி மூன்று  பேரை கொன்று விடுகிறார். இருப்பினும், தொடர்ந்து நடந்த தாக்குதலில் முகுந்த்தின் தியாகமும் ராணுவ வீரர்களின் தியாகமும் போற்றுதலுக்குரியது.

இதையே மையமாக வைத்து நகரும் அம ரன் படத்தின் கதையில்  சிறு வயது முதல் ராணு வத்தின் மீது கொண்ட ஆர்வம், ராணுவ பயிற்சி  பள்ளியில் இணைந்து தனது பயிற்சியை நிறைவு  செய்கிறார் சென்னையை சேர்ந்த முகுந்தாக நடிக்கும் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி யில் படிக்கும் ஜூனியர் சாய் பல்லவி இந்துவை  காதலிக்கிறார். கேரளா மாநில கிறிஸ்துவ பெண் இந்து, தனது காதலை பெற்றோரிடம் தெரிவிக்கிறார். முகுந்தை திருமணம் செய்து கொள்ள சம்ம தம் கேட்கிறார். ஆனால், ராணுவத்தில் மருத்து வராக பணியாற்றிய இந்துவின் அப்பா, அம்மா,  சகோதரர்கள் உட்பட குடும்பமே எதிர்க்கிறது. இதற்கிடையே ராணுவத்தில் சேரும் முகுந்த், பெற்றோர் சம்மதத்துடன் இந்துவை திருமணம் செய்துகொள்கிறார். படிப்படியாக கேப்டன் பதவி உயர்வும் கிடைக்கிறது. பணியில் அவ ருக்கு ஏற்பட்ட அனுபவங்களை, நிஜ வாழ்விய லில் இருந்து ஒரு ராணுவ வீரரின் கதையாக  அமரன் படத்தில் சொல்லி இருக்கிறார்கள். முகுந்த்-இந்து காதல், திருமணம், பெண் குழந்தை, லட்சியங்கள், இரு குடும்பங்களின் உணர்வுகள் என உள்ளதை உள்ளபடி சொன்  னது மட்டுமல்ல, சிவகார்த்திகேயன்-சாய்பல் லவி இருவர் நடிப்பும் உணர்ச்சிகரமாக உள்ள தால் எமோஷனலாக நகர்கிறது முதல் பாதி. துப்பாக்கிச் சண்டைகள் உடன் தொடங்கும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக சென்றா லும் படம் முடியும் வரைக்கும் கேட்கும் துப்  பாக்கி குண்டுகள் சத்தம், காட்சிகள் மனதிற்குள்  பதைபதைக்கிறது. தீவிரவாதிகள் அடுத்த டுத்து தாக்குதல்கள், தன்னுடன் வரும் ராணுவ  வீரர்கள், காஷ்மீர் இஸ்லாமிய மக்கள், அவர் களை காப்பாற்ற தனி ஒருவராக போராடும் முகுந்த் உயிர்த் தியாகம் என படத்தின் காட்சிகள்  வேக வேகமாக ஓடுகிறது.

2022 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த தி காஷ்மீர்  பைல்ஸ், 2021 ஆம் ஆண்டு வெளியான கேரளா  ஸ்டோரி இதற்கு முன்பு, விஸ்வரூபம் போன்ற திரைப்படங்கள் நாடு முழுவதும் மக்களின் எதிர்ப்புக்குள்ளானது. இந்த நிலையில், உண்  மைச் சம்பவம் என்ற பெயரில், உலகம் முழு வதும் 900 திரையரங்குகளில் திரையிடப்பட்ட அமரன் திரைப்படத்தில் சிக்கல் எங்கே தொடங்குகிறது என்பதுதான் மிக மிக முக்கி யம். மேலும் இதில், கையாண்டிருக்கும் அரசி யல் நுட்பத்தை விமர்சனம் செய்யாமல் இருக்க  முடியாது. உண்மைச் சம்பவங்களை படமாக்கும் போது களம் உண்மையாக இருக்க வேண்டும்.  இரு தரப்பு நியாயங்களையும் பேச வேண்டும்.  ஆனால், இந்த படம்  ராணுவத்தின், அரசு தரப்  பின் நியாயத்தை மட்டுமே பேசுகிறது. பயங்கர வாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்கள். அவர்களை பாதுகாக்கிறார்கள். இந்திய ராணு வம் தேடல் வேட்டை நடத்தினால் இஸ்லாமிய  மக்கள் கல் எறிகிறார்கள். பள்ளி செல்லும் இஸ்லாமிய மாணவர்களும் கற்களை வீசு கிறார்கள். இஸ்லாமிய பயங்கரவாதம் தான் காஷ்மீர் பிரச்சனைகள் அனைத்திற்கும் அடிப்ப டையாக இருக்கிறது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தேசத்திற்கு பெரிய ஆபத்து வந்துள்ளது என்கிற மிக மோச மான தோற்றத்தை இந்த படத்தின் மூலம் உரு வாக்கியுள்ளனர். இதன் மூலம், சராசரி மனி தரை கூட இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷம்  போட வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான  வெறுப்புப் பிரச்சாரத்தை கிளப்பி இழிவான அரசியலை பாஜக-ஆர்எஸ்எஸ் செய்ய முடிய வில்லை. எனவே, இந்துத்துவா கும்பலின் மறை முகத் திட்டத்தை, ஒரு ராணுவ வீரனின் மர ணத்தை வைத்து குறுகிய தேசிய வெறியை கிளப்புகிறது அமரன் படம்.

அதேபோல், இஸ்லாமியக் குழந்தைகள் துப்பாக்கிப் பயிற்சி எடுக்கிறார்கள். அதுவும் இந்தியாவுக்கு எதிராக உயிர்த் தியாகம் செய்ய வேண்டும் என்று சத்தியம் வாங்குகிறார்கள். இஸ்லாமிய குடும்பங்களில் பிறக்கும் ஒவ் வொரு குழந்தையும் வன்முறைகளோடு பிறக்கிறார்கள் என்று காட்சியை தந்திரமாக அமைத்துள்ளது படக்குழு. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது காஷ்மீரின் பெரும் பகுதி இஸ்லாமியர்கள், எங்கள் வழிபாடு வேண்டுமானால் பாகிஸ்தான் நாட்டுடன் ஒத்துப் போகலாம். நாங்கள் இந்த  மண்ணின் மைந்தர்கள். இதனால் இன்னொரு நாட்டிற்குச் செல்ல வேண்டியது இல்லை. எங்கள் தாய் நாடு இந்தியா தான். நாங்கள் அனைவரும் இந்திய தேசத்தை நேசிக்கிறோம் என்றனர். அன்றைக்கு, புரட்சிகர சிந்தனையா ளர்களால் ‘ஆசாதி, ஆசாதி’ வேண்டும் வேண்  டும் சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கமும்  ஓங்கி ஒலித்தது. ஆனால், வன்முறையை தூண்  டும் பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் முன்  வைக்கும் தனிநாடு கோரிக்கைதான் ‘ஆசாதி’.  இதற்கு காஷ்மீர் இஸ்லாமியர்கள் துணை போகி றார்கள் என்றும் காட்டுகிறது அமரன் படம்.  முகுந்த் தலைமையில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் கைது  செய்யப்படுகிறார்கள். அதில் ஒரு இயக்கத் தின் தலைவர் ஆயுதங்கள் ஏதுமின்றி நிரா யுதபாணியாக நிற்கிறார். அவரை விசார ணைக்கு அழைத்துச் சென்றார் முகுந்த் என்று  காட்டி இருந்தால் உண்மையில் இந்த படத்தின்  இயக்குனரை பாராட்டி இருக்கலாம். ஆனால்,  அவரை கொடூரமான முறையில் சுட்டுக் கொன்று  விடுகிறார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்த்து வரும் தீவிரவாத அமைப்பின் தலைவர்  ஒருவர் பாகிஸ்தானுக்கு போன் செய்து பேசு கிறார் என்றும் விஷம பிரச்சாரத்தையும் திட்ட மிட்டு அரங்கேற்றியிருக்கிறார்.

‘பல்லாண்டு காலமாக தீர்க்கப்படாத ஒரு அரசியல் பிரச்சனையை காட்டும் பொழுது இரண்டு பக்கங்களையும் காட்டாமல், மேஜர்  முகுந்த் வாழ்க்கையை தந்திரமாக பயன்படுத்  திய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இஸ்லா மிய தீவிரவாதமே காஷ்மீர் பிரச்சனைக்கு அடிப்படையாக இருக்கிறது என்று இஸ்லாமி யர்கள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை பண மாக, டாலராக மாற்றும் ‘இந்துத்துவா’ கும்பலை  திருப்தி படுத்தியிருக்கிறார்கள் என்பதை வானதி  பாராட்டுவதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.  அமரன் படம் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு  ராணுவ வீரனின் உண்மைக் கதை, இதில்  நடித்துள்ள அனைவரும் போட்டி போட்டு நடித்தி ருப்பதை பாராட்டும் திரை பிரபலங்களும், அர சியல் கட்சி பிரமுகர்களும் இந்த படத்தில் ஒளிந்தி ருக்கும் பாசிச அரசியலையும் அதன் கோர முகத்  தையும் சுட்டிக் காட்டாமல் இருப்பது துயரமே!