tamilnadu

img

சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

சிபிஐ விசாரணை கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை / மதுரை, அக். 3 - கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த விஜய் கட்சியின் கூட்ட நெரிசலில் சிக்கி  41 பேர் பலியான சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தொட ரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதி மன்றம், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று தமிழக வெற்றிக் கழகத்தை கடுமை யாக எச்சரித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் விஜய் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்ப வம் தமிழக அரசியலில் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், இந்த விசாரணை யை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில்  பலியானவர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீட்டை உயர்த்தி வழங்க வேண் டும், பொதுக்கூட்டங்களுக்கான வழி காட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 7 பொதுநல வழக்குகளை அக்.3 அன்று சென்னை உயர் நீதிமன்றமும், மதுரை கிளையும் விசாரித்தன. பொதுமக்களுக்கு அறிவுரை மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.  தண்டபாணி மற்றும் எம். ஜோதிராமன் ஆகியோர் அமர்வில் வழக்குகள் ஒன் றன் பின் ஒன்றாக விசாரிக்கப்பட்டன. விசாரணையின்போது நீதிபதிகள், கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசு  சிறப்பான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். அரசு நடவடிக்கை மேற்கொண்டாலும் மக்களும் சுயக் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த னர். குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடி யாது என்று தெளிவுபடுத்திய நீதிபதிகள் பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறை களை உருவாக்குவது குறித்த மனு சென்னை அமர்வில் ஏற்கனவே நிலு வையில் உள்ளதால், அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக் கோரி இடை யீட்டு மனு தாக்கல் செய்யுமாறு அறிவுறு த்தினர். கரூர் கூட்ட நெரிசலில் பலியானோ ருக்கான இழப்பீட்டை உயர்த்தி வழங்க கோரிய வழக்கில், விஜய் மற்றும் அரசுத் தரப்பு இரண்டு வாரங்களில் பதி லளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. சரமாரி கேள்வியும் - சிபிஐ விசாரணை நிராகரிப்பும் விசாரணையின் போது, கட்சிக் கூட்டங்களில் அடிப்படை வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர். தவெக பரப்புரையில் தண்ணீர் வசதி கூட செய்யப்படாதது ஏன், என்று சரமாரி யாக கேள்வி எழுப்பினர். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பரப்புரை களுக்கு அனுமதிக்கக் கூடாது என்றும், அத்தகைய சாலைகள் அருகே எந்த கூட்டமாயினும் நடத்தப்படக் கூடாது  என்றும் உத்தரவிடப்பட்டது. பொதுக் கூட்டங்களில் குடிநீர், மருத்துவம், ஆம்புலன்ஸ், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்