அதிகார போதை!
இட்லரின் கல்லறைகளை பிளந்து கொண்டுதான் டிரம்ப்புகள் பிறக்கிறார்கள் ஒரு நாட்டை அபகரிக்க முதலில் அவர்கள் மீது அவதூறு சுமத்த வேண்டும் உலகமெங்கும் வலம் வரும் பொய்யை மூலதனமாக்கி அந்நாட்டை கைப்பற்ற வேண்டும் உலக வரைபடத்தில் தன் ஆதிக்கக்கோடு இல்லாத எந்த நாட்டையும் அமெரிக்காக்காரன் அனுமதிப்பதில்லை மூக்கணாங்கயிறு மாட்டாத முரட்டு மிருகமாய் எல்லைக்கோடுகளை குத்திக் கிழிக்கிறான் வெனிசுலாவின் வழிந்தோடும் எண்ணெய்க் கிணறுகள் இயற்கை வளங்களை ஏகாதிபத்தியங்கள் அடாவடியாகத்தான் கைப்பற்றுகின்றன உலக சபையால் ஒன்றும் செய்ய முடிவதில்லை கையறு நிலையில் கருத்துச் சொல்லும் ஆயுத வியாபாரிகள் ஒரு நாட்டை போதையிருப்பதாக பொய் சொல்லித்தான் அதிகார போதையில் பரிசோதிக்கிறார்கள் இறையாண்மையை மீறி அதிபரை கண்களை கட்டித்தான் கைது செய்கிறார்கள் உலகமே பார்வையற்றவராய் வேடிக்கை பார்க்கிறது எத்தனை நாடுகள் எத்தனை அதிபர்கள் எத்தனை கோடி மக்கள் ஏன் இன்னும் மடியவில்லை உலக கேடியின் ரவுடித்தனம் பெரு முதலாளியம் சிறு நாடுகளின் வரை படங்களை விழுங்கிச் செரிக்கின்றது ஆயுதப் பசி அதிகாரப் பசி உலக நாடுகளை மேய்ந்து தின்னத் துவங்குகிறது எங்கிருந்தேனும் ஒரு சிறிய உளி உலக வல்லாதிக்கத்தை சிதறடிக்கக்கூடும் அன்றைய அலறலில் இறந்து போன இறையாண்மை நாடுகள் உயிர் பெறும்