tamilnadu

img

பாபநாசம் அருகே 2,555 ஹெக்டேர் அளவுக்கு சேதம் மழையால் 33% அளவிற்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை! வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

பாபநாசம் அருகே 2,555 ஹெக்டேர் அளவுக்கு சேதம் மழையால் 33% அளவிற்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை! வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

பாபநாசம், அக். 25- வடகிழக்கு பருவமழையால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் அடங்கிய வயல்வெளிகள் குளங்களாக மாறியுள்ளன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அம்மாபேட்டை அடுத்த கீழ கோயில்பத்து கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர், வயல்களை தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”கனமழையால் 33 சதவீத அளவிற்கு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து கணக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் கணக்கீடு செய்யும் பணி முடிந்த பிறகு பாதிப்புக்கு ஏற்ப  நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 2,555 ஹெக்டேர் அளவுக்கு தண்ணீரால் சூழப் பட்டுள்ளது. களத்தில் முதலமைச்சர் உத்த ரவுப்படி அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் உள்ளனர். அதிகாரிகள் உள்ளிட்ட அனை வரும் சுழன்று பணியாற்றி வருகின் றார்கள். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அவர்களது கட்சியை வளர்ப்பதற்காக ஏதேதோ பொய் சொல்லிக்கொண்டு வருகின்றனர். ‌தற்போது எதிர்க்கட்சித் தலைவர் நாகரிக மில்லாமல் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கூரை அமைத்து 7.26 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நெல் தான் பாதுகாக்கப்பட்டது. ஆனால் தற்போதைய திமுக அரசு பதவி ஏற்ற 4 ஆண்டுகளிலே 4.03 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்ளளவு கொண்ட மேற்கூரை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை கிடங்கு அமைக்கும் பணி நடந்து வரு கிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடி போல் சம்பா சாகுபடியும் அதிகளவில் விளைச்சல் இருக்கும்” என அவர் கூறினார். ஆய்வின் போது வேளாண்மை துறைச் செயலர் தட்சிணாமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குனர் முருகேஷ், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்கு னர் வித்யா, மாவட்ட ஆட்சித் தலைவரின் வேளாண்மை பிரிவு நேர்முக உதவி யாளர் சாமுவேல், அம்மாபேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் வெங்கட்ராமன், மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் குழு கமிட்டி செயலாளர் சரசு, அம்மாபேட்டை ஒன்றி யச் செயலாளர்கள் குமார், தியாக சுரேஷ், அம்மாபேட்டை நகரச் செயலாளர் ரமேஷ், பாபநாசம் வட்டாட்சியர் பழனி வேல், தோட்டக்கலை உதவி இயக்கு னர்கள் சுஜிதா, சினேக பிரியா, அம்மா பேட்டை பொறுப்பு இன்ஸ்பெக்டர் சகாய அன்பரசு, சப் இன்ஸ்பெக்டர் மதன்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.