சென்னை, டிச. 25 - அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்ப வத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்குவதுடன், கல்வி வளாகப் பாதுகாப்பை உறுதி செய்வ தற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்ப தாவது:
வளாகத்திற்கு உள்ளேயே நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது
சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் பயிலும் மாணவி ஒருவர் பல் கலைக்கழக வளாகத்திற்குள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி யளிக்கிறது. இந்த வன்குற்றச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. சென்னையின் மையப்பகுதியில் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் இப்படி நடந்திருப்பது அங்கு பயிலும் மாணவிகள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்கள் கவலையளிக்கின்றன
தமிழகத்தில் பெண்கள், குழந்தை கள் மீது, குறிப்பாகக் கல்விக்கூடங் களில் மாணவிகள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரு கின்றன என்பது கவலையளிக்கிறது. பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை வழங்கிட வேண்டுமெனவும், சமூக விரோத சக்திகளின் நடவடிக்கைகளை ஒழித்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை தேவை! மேலும், அண்ணா பல்கலைக்கழ கம் உள்ளிட்ட கல்வி நிலையங்கள், விடுதிகள் அனைத்திலும் பயிலும் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழ லை உருவாக்கிட வேண்டுமெனவும், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.