tamilnadu

img

மீனவர்கள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு

கோவை, ஜன. 16 - தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்று இலங்கை இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிர தீப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சென்னையில் கடந்த 11, 12   நடைபெற்ற இரண்டு நாள் “அயலகத்  தமிழர் மாநாட்டிற்காக” வந்த  இலங்கை வேளாண்மை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இணையமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், கோவை வடவள்ளி பகுதியில்  உள்ள “பப்புவா நியு கினியின் ட்ரேட்”  ஆணையாளர்  விஷ்ணு பிரபுவை நேரில் சந்தித்து பேசினார்.  இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய இலங்கை இணையமைச்சர்  சுந்தரலிங்கம் பிரதீப், “தமிழ்நாடு அரசின் அழைப்பை ஏற்று,  இரண்டு நாள் அயலக தமிழர் மாநாட்டிற்காக வந்தேன். இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து  அரசியல்வாதிகள், அதிகாரிகள், இலக்கிய ஆளுமை கள் கலந்து கொண்டனர். இது மிகவும் சிநேகப்பூர்வமான ஒன்று கூடலாக இருந்தது. இலங்கைக்கும் இந்தியா விற்கும் உள்ள நட்பு என்பது, வரலாறு தொட்டு இருந்து கொண்டிருக்கிறது. இது தொப்புள்கொடி உறவு.  இந்தியாவையும் இலங்கையை யும் 32 கிலோ மீட்டர் மட்டும்தான்  கடல் பிரிக்கிறது. இருப்பினும் எங்க ளுக்குள் அன்பு உண்டு” என்று தெரி வித்தார். “இலங்கையின் பொருளா தார வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாததாக இருந்து வரு கிறது” என்று கூறிய அவர், “மீனவர் பிரச்சனை குறித்து, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தமிழ்நாடு மற்றும் இந்திய அரசுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சுமூகமான தீர்வு காண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது” என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்குள்ள நிறு வனத்தினர் எங்கள் நாட்டில் முதலீடு  செய்யுங்கள், எங்கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு  செல்வதற்கு முன் வர வேண்டும்.  மாநாட்டிற்காக தமிழ்நாட்டிற்கு வந்த போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசினோம்.   அப்பொழுது இலங்கைக்கு கல்வி மற்றும் விளையாட்டு துறைகள் மூலம் உதவிகள் கேட்டுள்ளதாக வும், அதற்கான உதவிகளை செய்வதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்றும் கூறினார்.