கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டு கள் நிறைவடைவதை முன்னிட்டு, டிசம்பர் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு விழா நடைபெற வுள்ளது. இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந் தர் மண்டபம் இடையே இந்தியாவின் முதல் கடல்சார் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட வுள்ளது. கடல் நடுவே கண்ணாடிப் பாலம் அமைப்பது இந்தியாவிலேயே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. “வள்ளுவர் நமக்கு வெறும் அடையா ளம் அல்ல. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற சமூக நீதித் தத்துவத்தை வழங்கிய பேராசான். சமுதாயம், ஆட்சி முறை, தனிமனித வாழ்க்கை இவை எப்படி அமையவேண்டும் என்பதற்கான அற நெறிகளை வழங்கிய வழிகாட்டி” என முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது மடலில் குறிப்பிட்டுள்ளார். புத்தாயிரம் ஆண்டு தொடக்கமான 2000-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி யால் திறந்து வைக்கப்பட்ட இச்சிலை, 133 அடி உயரம் கொண்டது. சிற்பி வை.கண பதி ஸ்தபதி அவர்களின் தலைமையில் வடி வமைக்கப்பட்ட இச்சிலை, 2004-ல் ஏற்பட்ட சுனாமி பேரலையையும் தாக்குப்பிடித்து நிமிர்ந்து நின்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘பேரறிவுச் சிலை’ (Statue of Wisdom) என அழைக்கப்படவுள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் அவர் கள் தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளு வர் ஆண்டுக் கணக்கை நடைமுறைப் படுத்தியதோடு, குறள் நெறியை அனைத்து மக்களுக்கும் பரப்புகின்ற வகையில் பேருந்துகளிலும் திருக்குறளை எழுதச் செய்தார். மேலும் சென்னையில் வள்ளு வர் கோட்டம் அமைத்து புகழ் சேர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “திராவிட இயக்கம் எப்போதும் திருக்குற ளையும் திருவள்ளுவரையும் போற்றி வரு கிறது. தந்தை பெரியார் திருக்குறள் மாநாடு களை நடத்தினார். பேரறிஞர் அண்ணா திருக்குறளின் பெருமையையும் திருவள்ளு வரின் சிறப்பையும் ஒவ்வொரு நிகழ்விலும் எடுத்துரைத்தார். முத்தமிழறிஞர் கலைஞர் குறளோவியம் தீட்டினார்” என்றும் முதல்வர் தமது மடலில் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளி விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, வள்ளுவம் போற்றும் கருத்த ரங்கம், பட்டிமன்றம், இலக்கிய நிகழ்வுகள், மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா ஆகியவை நடைபெற வுள்ளன. “உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் சிலை போல தமிழ்நாடும் தமிழர்களும் உயர்ந்திட வேண்டும், அதற்கேற்ப வள்ளுவர் வழங் கிய திருக்குறளின் நெறி போற்றி நாம் வாழ வேண்டும். தமிழின் சிறப்பை உலகம் உணர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கண்ணாடிப் பாலம் சுற்றுலாப் பயணிகள் இரு பாறைகளுக்கும் இடையே எளிதாக பய ணிக்க உதவும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.