வைக்கத்தில் ‘சாதி எல்லைப் பலகை’ அகற்றப்பட்டு சத்தியாக்கிரகம் முடிவுக்கு வந்த நூற்றாண்டு
கோட்டயம் பாதையில் நடக்க மக்களுக்கு வாய்ப் பளித்த வைக்கம் சத்தியாக்கிர கம் முடிவுக்கு வந்து ஞாயிறன்று (நவ.23 ) 100 ஆண்டுகளை நிறைவடைந்தது. 1925 நவம்பர் 23 அன்று, கே.கேளப்பன் பொதுச்சாலைகளில் சுதந்திரமாக நடமாட அனுமதித்து அறிவிப்பை வெளியிட்டார். இதன்மூலம், 603 நாட்கள் நீடித்த ஒரு புகழ் பெற்ற வைக்கம் போராட்டம் இறுதியாக வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வைக்கம் சத்தியாக்கிரகம் மார்ச் 30, 1924 அன்று தொடங்கியது. வைக்கம் மகாதேவர் கோவில் அருகே பொதுச்சாலையில் ஒடுக்கப்பட்ட சாதியின ருக்கு நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்டது. அதற்காக சாதி எல்லை அறிவிப்பு பலகை கள் வைக்கப்பட்டிருந்தன. அதை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சி யாக அத்தகைய தீண்டாமை பலகைகள் அகற்றப்பட்டு நவம்பர் 23 ஞாயிற்றுக் கிழமை யுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்தப் போராட்டம் டி.கே. மாதவன், ஸ்ரீ நாராயண குரு, ஈ.வே.ராமசாமி நாயக்கர் (பெரியார்) , மன்னத்து பத்மநாபன், கே.பி. கேசவமேனன், கே.கேளப்பன் போன்ற மறு மலர்ச்சித் தலைவர்களால் வழிநடத்தப் பட்டது. மகாத்மா காந்தி 1925 மார்ச் 9 அன்று வைக்கம் வந்தார். சத்தியாக்கிரகத்தை எதிர்த்த இண்டம்துருத்தி தேவன் நீல கண்டன் நம்பூதிரியை காந்தி சந்தித்தார். பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததால், சத்தி யாக்கிரகம் துவக்கப்பட்டது. 603 நாட்கள் நீடித்த புகழ்பெற்ற போராட்டம் நடமாடும் சுதந்திரத்தை அடைவதில் முடிந்தது.
