states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் யூசுப் தாரிகாமி\

அனைத்து காஷ்மீரிகளும் தில்லி குண்டுவெடிப்பை கண்டித்தனர். ஆனால் இப்போது குண்டுவெடிப்பின் பெயரில் அனைத்து காஷ்மீரிகளும் சந்தேகிக்கப்படுகிறார்கள். காஷ்மீரிகளை சந்தேகத்தின் நிழலில் வைக்கக்கூடாது. இது தேசிய நலனுக்கானது அல்ல. குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் முறையான விசாரணை மூலம் வெளியே கொண்டு வரப்பட வேண்டும்.

சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் அம்பதாஸ்

நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது. அஜித் பவாரின் (மகா., துணை முதலமைச்சர்) வீட்டில் இருந்து அல்ல. அஜித் பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?

காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வடேட்டிவார்

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தோ அல்லது காவல் துறையினரை வைத்து மிரட்டல் விடுத்தோ தேர்தலில் போட்டியிட விடாமல் மாநில பாஜக அரசு தடுக்கிறது. அதன்பிறகு எவ்வித போட்டியாளரும் இன்றி தேர்தலில் பாஜக நிர்வாகிகளின் உறவினர்கள் வெற்றிபெற்றதாக அறிவித்து வருகின்றனர்.

எழுத்தாளர் சுனித்ரா சவுத்ரி

பீகார் அமைச்சரவையில் பெண்களுக்கு மட்டும் குறைவான பிரநிதித்துவம் இல்லை. ஈபிசி (மிகவும் பின்தங்கிய வகுப்பு) அமைச்சர்களின் எண்ணிக்கையும் 25% இலிருந்து 19% ஆக குறைந்துள்ளது. இதை பற்றி யாரும் பேசவில்லை ஏன்?