நாகை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
சென்னை, நவ.23 - நாகை மாவட்ட மீனவர்கள் நவ.24 ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்லத் மீன்வளத் துறை தடை விதித்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் நவ.24 ஆம் தேதிக்கு முன் கரை திரும்பவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.