“வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே எஸ்ஐஆர்”
வாக்காளர்கள் அரசாங் கத்தை தேர்தெடுக்கும் நிலை மாறி அரசாங்கம் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறையே எஸ்ஐஆர் என பொருளாதார நிபுணரும், அரசியல் விமர்சகருமான பர கலா பிரபாகர் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஆவார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் மேலும் கூறுகை யில்,”வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத் தின் (எஸ்ஐஆர்) முக்கிய நோக்கம், தங்கள் பார்வையில் நாட்டில் இருக்கக் கூடாதவர்களை வாக்காளர் பட்டிய லில் இருந்து நீக்குவதுதான். அரசாங் கத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்காளர் கள் என்ற நிலையை மாற்றி, வாக்கா ளர்களை அரசாங்கமே தேர்ந்தெடுக்கும் செயலாக எஸ்ஐஆர் உள்ளது. தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC), குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA) ஆகிய வற்றை மக்கள் எதிர்ப்பால் தொடர முடி யாததால் அவற்றை எஸ்ஐஆர் வடி வத்தில் பின்வாசல் வழியாகக் கொண்டு வரும் முயற்சி இது. வாக்களிக்கும் உரிமை பறிக்கப் படும்போது, அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகிவிடுகிறார்கள். இதுவே எஸ்ஐஆரின் அடிப்படை இலக்கு. ஒடுக்கப்பட்ட, கல்வியறிவற்ற, சிறு பான்மையின மக்கள் பெயர்களை நீக்கு வதே எஸ்ஐஆரின் முதன்மையான இலக்கு. அண்மையில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் ஓர் உதார ணம். ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களின் பெயர்கள் மட்டுமே எஸ்ஐஆர் மூலம் தக்கவைக்கப் பட்டன. எதிர்க்கட்சிகள் அங்கே சில இடங்களில் வெற்றிபெற்றதே ஆச்சரி யம்” என அவர் கூறினார். பரகலா பிரபாகர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
