states

img

கேரள உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்  பரிசீலனை நிறைவு

கேரள உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்  பரிசீலனை நிறைவு

கேரள உள்ளாட்சித் தேர்தலுக் கான வேட்பாளர் பரிசீலனை சனியன்று முடிந்த நிலையில், தற்போது 98,451 வேட்பாளர்கள் களத் தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான நேரம் ஞாயி றன்று முடிவடைந்த பிறகே போட்டியிடு வோரின் முழு விவரம் வெளியாகும். முன்னணிகளும் வேட்பாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில்  உள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தல்  பிரச்சாரம் தொடங்கிவிட்டதால், வேட்பா ளர்கள் மற்றும் முன்னணிகளுக்கு மிகுந்த  உற்சாகத்தை அளித்து வருகிறது. சனி யன்று நடைபெற்ற பரிசீலனையில், 1,40,995 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள் ளப்பட்டன. 2,261 வேட்புமனுக்கள் நிராக ரிக்கப்பட்டன. தற்போது 98,451 வேட்பா ளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பு மனுக்களை வாபஸ் பெற திங்கள் கடைசி  நாள் ஆகும். அதன் பிறகு, மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்களின் போட்டியிடும்  வேட்பாளர்களின் முழு விவரம் தெளி வாகத் தெரியும். காங்கிரஸ் மற்றும் பாஜக ஏற்கனவே  தங்களுக்கு எதிராக வேட்புமனு தாக்கல்  செய்தவர்களை தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளன. தற்போது, பிரச்சாரக் களத்தில் எல்டிஎப் பெரும் முன்னிலை பெற்றுள்ளது. பல  இடங்களில் உள் பிரச்சனைகள் காரண மாக காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் பெரும் நெருக்க டியை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பி டத்தக்கது.