states

img

பாஜக ஆளும்  உத்தரகண்ட் பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

பாஜக ஆளும்  உத்தரகண்ட் பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

பாஜக ஆளும் உத்தரகண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தின் தபாரா கிரா மத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் புதர்களில் 161 ஜெலட்டின் குச்சிகளை காவல்துறை யினர் கைப்பற்றியுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் சுபாஷ் சிங் அளித்த புகாரின் பேரில் ஜெலட்டின் குச்சிகள் பொட்டலம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெலட்டின் குச்சிகள் கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறை களை வெடிக்கச் செய்ய  பயன்படுத்தப் படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஜெலட்டின் குச்சிகள்  பொட்டலம் ஏன் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன? என்பது குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரி வித்தனர். உயிர் தப்பிய மாணவர்கள் பள்ளி மாணவர்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த போது, புதருக்குள் பந்து சென் றது. அதை எடுக்கச் சென்ற பொழுது, ஜெலட்டின் குச்சி பொட்டலத்தை கண்ட  மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரி யருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால்  நல்வாய்ப்பாக மாணவர்கள் அதனை பள்ளிக்கு தூக்கிக் கொண்டு வர வில்லை. தலைமை ஆசிரியருக்குத் தக வல் தெரிவித்து விட்டு மீண்டும் விளை யாடச் சென்று விட்டனர். தில்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் (காவல்நிலையம்) குண்டுவெடிப்பு சம்ப வங்களுக்கு இடையே உத்தரகண்ட் பள்ளியில் ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.