tamilnadu

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 6 ஆயிரம் ஆண்டு பழமையான ஜாஸ்பர் கற்கள்

விருதுநகர், நவ.8 - வெம்பக்கோட்டையில் நடை பெற்று வரும் அகழாய்வில் அணிகலன்  தயாரிக்க பயன்படும் 6 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய ஜாஸ்பர், சார்ட்  கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம், வெம்பக் கோட்டை அருகே விஜய கரிசல்குளம்  பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு  நடைபெற்று வருகிறது. இந்த அக ழாய்வில் தங்க நாணயம், செப்புக்காசு கள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட  காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட  சில்லு உள்ளிட்ட 2 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று அகழ்வாய்வு இயக்குனர் தெரிவித் துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தோண்டப் பட்ட அகழாய்வு குழியில் 6 ஆயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய மிகவும் பழ மையான அணிகலன் தயாரிக்க  பயன்படும் ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.  இதுகுறித்து அகழ்வாய்வு இயக்கு நர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகை யில், “இந்த கற்கள் நுண் கற்காலத் தில் வாழ்ந்த மக்கள் விலங்குகளை வேட்டையாட கருவிகள் தயாரிக்க  பயன்படும் மூலப்பொருள்களாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளது. இக்கற்கள் தற்போது புழக்கத்தில் இல்லை,” என்று  தெரிவித்தார்.  தமிழ்ப் பெருங்குடி  மக்களின் வடிவமைப்பு கலை  இதுகுறித்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் வலைதள  பதிவில், ‘சுறா ஏறு எழுதிய மோதிரம்  தொட்டாள்’ எனும் கலித்தொகை பாடல் மூலம் பழந்தமிழர்கள்   அணி கலன்களை வடிவமைத்து அணிந்தனர்  என்பது புலனாகிறது.  விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை- விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட  அகழாய்வில், பழமையான அணி கலன் தயாரிப்பு மற்றும் விலங்குகளை வேட்டையாடப் பயன்படும் கருவிகள் தயாரிப்பின் மூலப்பொருட்களான ஜாஸ்பர், சார்ட் கற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இத்தகு சான்றுகள், அக்கா லத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெருங்குடி  மக்களின் வடிவமைப்பு கலையை  மெய்ப்பிக்கும் விதமாக அமைந்து உள்ளன என்று தெரிவித்துள்ளார்.