சுரண்டல் என்பது இன் றைக்கு நவீனமயமாக்கப் பட்டுள்ளது. இந்த நவீனமயமாக்கப் பட்ட சுரண்டலைப் புரிந்து கொள்ளா மல் தொழிலாளியை அணுக முடியாது. ஓர் ஆசிரியர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்; ஓர் அரசு ஊழியர் எவ்வாறு சுரண்டப்படுகிறார்; தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றும் தொழிலாளர் எவ்வாறு சுரண்டப்படுகிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் முதலாளித்துவ வளர்ச்சியால் ஒரு பகுதி வளர்ந்திருக்கிறது என்பது உண்மை. இன்னொரு புறம் முறைசாரா தொழி லாளர்களும் அதிகரித்துள்ளனர். இவர்கள் தான் நமது நாட்டில் அதிக அளவில் உள்ளனர். இன்றைக்கு இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகள் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளன. அந்த இயக்கம் ஒரு பாசிச இயக்கம். பாசிச இயக்கம் என்றால் உடனடி யாக ஜெர்மன் பாசிசத்தோடும், இத்தாலிய பாசிசத்தோடும் இந்திய பாசிச சக்திகளை ஒப்பிட முடியாது. முசோலினி, ஹிட்லர் இருந்த காலம் வேறு. அன்றைக்கு இருந்த தொழில்கள் வேறு. இந்தியாவில் உள்ள சூழ்நிலை வேறு. அதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அதன் வர்க்க குணம் என்ன என்பதை நம்முடைய உழைப்பாளி வர்க்கம் புரிந்துகொள்ள வேண்டி யுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குணத்தைப் புரிந்து கொண்டால் தான் அதன் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 105 ஆண்டுகளில் எவ்வாறு அவர்கள் வளர்ந்திருக்கிறார்கள்; தமிழ்நாட்டில் எப்படியெல்லாம் சமூகத்தில் ஊடுருவியுள்ளனர் என்ப தைப்புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வர்க்கத்தைப் பற்றி பேச வில்லை. சாதி இருக்க வேண்டும் என்கிறார்கள். சாதி ஆண்டவன் கொடுத்தது என்று கூறி, அந்த நியாயத்தை ஏற்றுக்கொள்ளுமாறு மக்களின் மனநிலையை மாற்று கிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து மாநிலத்தி லும் அதை அமலாக்க முயற்சிக் கிறார்கள். பல மாநிலங்களில் அவர்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற் கும் வருகிறார்கள்.
இந்துத்துவா அமைப்புக்கு எதிராக, அதன் நடவடிக்கைகளுக்கு எதிராக சமரசமின்றி போராடுகிற துணிவு செங்கொடி இயக்கத்திற்குத் தான் உள்ளது. இந்துத்துவாவை எதிர்த்த மாறுபட்ட தத்துவம் செங் கொடி இயக்கத்திற்கு மட்டும் தான் உள்ளது. இந்துத்துவா தான் மக் களை சாதி ரீதியாக பிளவுபடுத்து கிறது. நாம் தான் ஒன்றுபடு போராடு என்கிறோம். ஒன்றுபடு போராடு என்கிற கோஷமே இந்துத்துவா வுக்கு எதிரான கோஷம். உச்சநீதி மன்ற முதன்மை நீதிபதி ராமர் கோவில் இடிப்பு பற்றிய தீர்ப்பில் கூறும் போது, நான் கடவுளை யோசித்தேன் என்று சொல்கிறார். இதை விமர்சிப்பது நமது கடமை. அவர்கள் கவர்னர் மூலமாக சில காரியங்களை செய்கிறார்கள். நீதித்துறை மூலமாக சில காரியங் களை செய்கிறார்கள். நிர்வாகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூலமாக பல காரியங்களை செய்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் தான் சாம்சங் போராட்டம் நடைபெற்றது. ஒன்று மூலதனத்திற்கு எதிராக தொழி லாளி வர்க்கம் திரண்டு போராடி யதால் கோபம்; இரண்டு உழைப் பாளி மக்களின் ஒற்றுமையை பாது காப்பதால் ஆத்திரம். இந்த போராட்ட த்தில் பங்கேற்ற 1070 தொழிலாளிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர், எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்கு தெரியாது. ஆனால் போராட்டம் துவக்கியது முதல் ஒன்றாகவே இருக்கிறார்கள். இந்த போராட்டத்தின் வெற்றியை தமிழ்நாடு முழுவதும் நாம் எடுத்துச்செல்ல வேண்டும். லாபம் எங்கு கிடைக்குமோ அங்கு தான் முதலீடு வரும். மூல தனம் என்பது வலுவானது.தொழி லாளர் போராட்டம் காரணமாக வேறு மாநிலத்திற்கெல்லாம் தொழிற்சாலை போகாது. ஏன் ராஜஸ்தான் முதலாளி டால்மியா கடந்த 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சிமிண்ட் பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்? இங்கு தான் சிமிண்ட்டுக்கான சுண்ணாம்புக் கல் கிடைக்கிறது. தோழர்கள் ஆர்.உமாநாத், பி.ராமச்சந்திரன் தலைமையில் டால்மியாவை எதிர்த்து நாம் நடத்தாத போரா ட்டமா? துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டது. ஆனால் இன்றும் டால்மியா அங்கு தொழிற்சாலை நடத்து கிறாரே! கோத்தாரி மராட்டியக் காரர். தமிழ்நாட்டில் ஜவுளி, சர்க்கரை ஆலைகளை நடத்து கிறார். முதலீடு முழுவதும் தமிழ்நாட்டில் செய்கிறார்கள். எனவே மூலதனத்தின் நோக்கம் லாபம். லாபத்தைத் தீவிரப்படுத்த அது சுரண்டும். சுரண்டலை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடியே தீரும்!
திண்டுக்கல்லில் சிஐடியுவின் எதிர் நீச்சல் யுடியூப் சேனலை துவக்கி வைத்து ஆற்றிய உரையின் பகுதிகள்.