tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது!

காரைக்கால், ஜன. 2 - காரைக்காலை அடுத்த காசாக்குடி மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்குச் சொந்த மான விசைப்படகில், 30.12.2025 அன்று 11 மீன வர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் வெள்ளியன்று அதிகாலை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி,  மீனவர்கள் 11 பேரையும் கைது செய்து, காங்கேசன் துறை முகத்திற்கு அழைத்து சென்றனர். 

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

சென்னை, ஜன. 2 - சனிக்கிழமையன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களி லும், புதுவை மற்றும் காரைக் கால் பகுதிகளிலும் லேசா னது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடலில் ஜனவரி 6 அல்லது அந்த வாரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உரு வாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற் றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு : இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள்!

சென்னை, ஜன. 3 - எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பிறகு தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 19 அன்று வெளியிடப் பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற் பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாக காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் வாக்காளர்களாக சேர்வதற்கு ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18ஆம் தேதி கடைசி நாள். இதையொட்டி, வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய  4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்திருந் தார். அதன்படி, இந்த சிறப்பு முகாம் முதற்கட்டமாக கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் நடை பெற்றது. தற்போது இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள ஜனவரி 3, 4  ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. அனைத்து வாக்குச் சாவடி களிலும் இந்த சிறப்பு முகாம் நடை பெற உள்ளது. வரைவு வாக்காளர் பட்டி யலில் பெயர் இடம்பெறாதவர்கள், இந்த  வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறு மாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது.

தமிழகத்தில் புத்தாண்டு அன்று பிறந்த 545 குழந்தைகள்!

சென்னை, ஜன. 2 - 2026 ஆங்கிலப் புத்தாண்டு நாளில் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன. திருப்பத்தூரில் 12 குழந்தைகள், நெல்லை மாவட்டத்தில் 24 குழந்தைகள், தூத்துக்குடியில் 12 குழந்தைகள், குமரி மாவட்டத்தில் 6 குழந்தைகள் என தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.