tamilnadu

img

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் 500 ஆவது நூல் அறிமுகம்

தகடூர் புத்தகப் பேரவை சார்பில் 500 ஆவது நூல் அறிமுகம்

தருமபுரி, டிச.24- தகடூர் புத்தகப் பேரவை சார் பில், 500 ஆவது நூல் அறிமுக நிகழ்ச்சியில், ஆட்சியர் சதீஸ் உட் பட திரளானோர் கலந்து கொண் டனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில், தகடூர் புத்தகப் பேரவையின் 500 ஆவது நூல் அறிமுக நிகழ்ச்சி புதனன்று நடை பெற்றது. இதில், ‘அறி(வுமுகம்’ நூலை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோர் வெளி யிட்டனர். அப்போது அவர்கள் பேசு கையில், புதிய படைப்புகளை வாச கர்களிடம் கொண்டு சேர்ப்பது,  படைப்பாளிக்கும் வாசகர்களுக் கும் இடையே உரையாடலை உரு வாக்குவது மற்றும் படைப்பின் சிறப்பை விமர்சனங்கள் மூலம் வெளிப்படுத்துவது நூல் அறிமுக நிகழ்ச்சிகளின் முக்கிய நோக்கங் கள் ஆகும். கல்லூரி மாணவர்கள் அறிவாற்றலை பெருக்கி கொள்ள அனைவரும் புத்தகங்களை படிக்க வேண்டும். சிறப்பான வாழ்க்கைக் கும், சிறந்த வளர்ச்சிக்கும் கல்வி  மிக மிக அவசியம் என்பதை உணர்ந்து, கட்டாயம் புத்தக வாசிப்பு பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஒரு புத்தகத்தை படித்து விட்டால், அடுத்தடுத்து தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு  விடும். நல்ல புத்தகங்கள் நல்ல ஆளுமையை உருவாக்கும்; சிறந்த  புத்தகங்கள் சிறப்பான வளர்ச் சிக்கு உதவும். அப்படிப்பட்ட உன்ன தமான புத்தகங்களை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும், என்ற னர். இந்நிகழ்ச்சியில் தகடூர் புத்தகப்  பேரவை தலைவர் இரா.சிசுபாலன், செயலாளர் இரா.செந்தில், பொரு ளாளர் எம்.கார்த்திகேயன், தமுஎ கச மாநில துணைத்தலைவர் ஆத வன் தீட்சண்யா, ரோஜா முத்தையா  ஆராய்ச்சி நூலக இயக்குநர் கோ. சுந்தர், தருமபுரி கல்லூரி கல்வி  இணை இயக்குநர் என்.இராமலட் சுமி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.