tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ஜன.1 முதல் ரயில் நேர மாற்றம்

உடுமலை, டிச.27- ரயில் எண் 16722 மதுரை யில் இருந்து கோயம்பத் தூர் தினசரி முற்றிலும் முன்ப திவில்லா விரைவு ரயில்,  ரயில் நிலையங்களுக்கு வரும் விபரம்: மதுரை :  காலை 7:05க்கு பதிலாக 7:10 புறப்படும், கூடல் நகர்:7:19, சமயநல்லூர்: 7:28,  சோழவந்தான்:7:37, வாடி பட்டி: 7:45, கொடைகானல் ரோடு: 7:55, அம்பாத்துரை: 8:09, திண்டுக்கல் : 8:22,  அக்க ரைப்பட்டி :8:37, ஒட்டன்சத்தி ரம்:8:54, சத்திரப்பட்டி :9:07,  பழனி : 9:27க்கும் பின்னர்   புஷ்பத்தூர்:9:41, மடத்துக் குளம் :9:49, மைவாடி :9:55,  உடுமலைபேட்டை :10:08, கோமங்களம் :10:21, பொள் ளாச்சி: 10:37, கிணத்துக்க டவு: 11:04, போத்தனூர் : 11:39  கோயம்பத்தூக்கு மதியம்: 12:15 க்கு வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடப்பில் போடப்பட்டுள்ள உடுமலை நகராட்சி விரிவாக்கம்

உடுமலை, டிச.27- உடுமலை  ஊராட்சி ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க  வேண்டும் என்ற கோரிக்கை நடைபெறாத காரணத்தால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகின்றனர். உடுமலை ஊராட்சி ஒன்றியம் 1962 ஆம் ஆண்டு உருவாக் கப்பட்டது.  இதில் 38 ஊராட்சிகள் 110க்கும் மேற்பட்ட சிறிய  கிராமங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் என  அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய ஊராட்சி ஒன்றியமாக  உள்ளது. உடுமலை நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக நகர்மன்றத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டது, நடைமுறைக்கு வராமல்  உள்ளது. அதே போல் உடுமலை ஒன்றியத்தை நிர்வாக வச திக்கும், ஊராட்சிகளின் வளர்ச்சியை வேகப்படுத்தவும் ஒன்றியப்பகுதியை இரண்டாக பிரிக்கும் திட்டத்திற்கு, பொது  மக்கள் அரசியல் கட்சிகளின் கருத்து கேட்புக்கூட்டம் கடந்த  2014 ல் நடைபெற்றது. இதுவும் நடைமுறைக்கு வரவில்லை.  எனவே நிர்வாக நடைமுறைக்கும் கிராமங்களின் வளர்ச்சிக் கும் பெரிதும் உதவும் வகையில் உடுமலை ஒன்றிய விரி வாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்  விற்பனை செய்த 5 கடைகளுக்கு அபராதம்

திருப்பூர், டிச.27- திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையம் அருகில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்த 5  கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு  முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள்,  டம் ளர் உள்ளிட்ட பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தடை  செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படு வதாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள்  வந்தது. இதை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட  கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் பின்புறம்  உள்ள காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மாசு கட்டுப்பாட்டு  வாரிய பறக்கும் படையினர் சனியன்று ஆய்வு மேற்கொண்ட னர்.  இதில், 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற் கொண்டதில் 5 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்  பைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்தது கண்டறி யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த கடைகளில் இருந்து  சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பொருட் களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்க ளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தனர்.  சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொது மக்களும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வரக்கூடிய நிலையில், வணிக நிறுவனங்களும் தங்கள்  வாடிக்கையாளர்களுக்கு துணிப்பை வழங்க வேண்டும். துணிப் பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும்  வலியுறுத்தினர்.