tamilnadu

img

குடியரசு தினம்  சென்னை விமான நிலையத்தில்  5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தினம்  சென்னை விமான நிலையத்தில்  5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஜன.18 - இந்தியாவின் 77 ஆவது குடியரசு தின விழாவை (ஜன.26) முன்னிட்டு, சென்னை சர்வதேச விமான நிலை யத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த ப்பட்டுள்ளன. ஞாயி றன்று (ஜன.18) முதல்  இந்தச் சிறப்புப் பாது காப்பு நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. விமான நிலையத் தின் வெளிப்பகுதி முதல் விமானங்கள் நிற்கும் பகுதி வரை ஐந்து அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இது ஜன வரி 30 ஆம் தேதி நள்ளி ரவு வரை தொடரும். குடி யரசு தினத்திற்கு முந்தைய தினங்களான ஜன.24, 25 மற்றும் ஜன.26  ஆகிய மூன்று நாட்களில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, ஏழு அடுக்கு பாதுகாப் பாக உயர்த்தப்படும். பாதுகாப்புச் சோதனை கள் அதி கரிக்கப்பட்டு உள்ளதால், பயணிகள் சிரமத்தைத் தவிர்க்க முன்னதாகவே விமான  நிலையம் வர அறிவுறுத் தப்பட்டுள்ளனர்.