100 நாள் வேலைத்திட்டத் தொழிலாளர்கள் 3 பேர் பலி! பணியின் போது, ஆலமரக் கிளை முறிந்து விழுந்து விபத்து
குடும்பத்திற்கு நிவாரணம் - அரசுப் பணி வழங்க விதொச கோரிக்கை
சென்னை, மே 14 - திருவண்ணாமலை அருகே ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் மீது ஆலமர கிளை முறிந்து விழுந்தது. இதில் 3 பெண் தொழிலாளர் பலி யான நிலையில், அவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசுப் பணி வழங்கிட வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் எம். சின்னத்துரை எம்எல்ஏ, பொதுச் செய லாளர் வி. அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:
3 பேர் பலி; 8 பேர் காயம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஒன்றியம் கழனிபாக்கம் ஊராட்சியில் மே 11 அன்று ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த தொழிலாளர் கள் மதிய உணவு இடைவேளையின் போது ஆலமரத்தின் கீழ் நிழலுக்காக அமர்ந்திருந்த னர். அப்பொழுது வீசிய காற்றில் ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் அன்னபூரணி 57, வேண்டா 45, பச்சையம்மாள் 50 ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளனர். 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
இந்நிலையில், இறந்த தொழிலாளர் களின் குடும்பத்திற்கு ஒன்றிய - மாநில அரசுகள், தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும். குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும். விபத்தில் காயமடைந்த 1. சம்பூர்ணம் (60), 2. பாஞ்சாலை (48), 3. பத்மாவதி (52), 4. கனகா (50), 5. தேவி (62), 6. முத்தம்மாள் (25) ஆகிய தொழிலாளர்களும் 1. லட்சிதா (6) 2. கிஷாந்த் (5), 3. ப்ரீத்தி (4) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும் கடுமையாக காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் குடும்பங் களுக்கு தலா ரூ. 2 லட்சம் அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும். ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர் களுக்கு நிழல்பந்தல் அமைத்து தரவேண்டும். பணித் தளத்தில் அப்பட்டமாக மீறப்பட்ட சட்ட விதிகள் குழந்தைகளின் பாதுகாப்பை பணியிடத் தில் உறுதிப்படுத்த வேண்டும் என்ற சட்ட விதிகள் மதிக்கப்படாமல் அப்பட்டமாக மீறப் பட்டுள்ளதால் இந்த விபத்து நடந்துள்ளது. 100 டிகிரிக்கு மேல் வெயில் அடிக்கும் போது கூட ஊரக வேலைத்திட்டப் பணித் தளங்களில் நிழல்பந்தல் அமைப்பதில்லை. குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படுவதில்லை என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பணித் தளங்களில் சட்ட விதிகளை பின்பற்றி நிழற் கூடாரம், குடிதண்ணீர், குழந்தை பாதுகாப்பு, மருத்துவ முதலுதவி உபக ரணங்கள் உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தொடர்ச்சியாக வலி யுறுத்தி வந்த போதிலும் பெரும்பகுதி யான ஊராட்சிகளில் இது நிறைவேற்றப்படு வதில்லை.
குடிநீர், நிழல்பந்தல், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்க!
ஊரக வேலையுறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை குறைத்து வழங்கிட சட்டம் பேசும் அதிகார வர்க்கத்தினர், ஊரக வேலை திட்டத்தில் மேற்கண்ட சட்ட விதிகளை பின்பற்றாமல் இருப்பதுவே, இது போன்ற விபத்துகளுக்கு காரணமாக உள்ளது. வேலைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்ற வகையில் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வ மான முறையில் ஊரக வேலையுறுதித் திட்டத் தை சட்ட விதிகளை பின்பற்றி அனைத்து ஊராட்சிகளிலும் நிழல், குடிதண்ணீர் குழந்தை பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். வேலை வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விபத்தில் காயம் அடைந்து செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் - குழந்தை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்வன், திரு வண்ணாமலை நகரச் செயலாளர் எம். பிரக லாதன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே. வெங்கடேசன் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.