tamilnadu

திருச்சி, நாகர்கோவிலுக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்

திருச்சி, நாகர்கோவிலுக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்

சென்னை, ஜன. 18 - மேற்​கு​வங்​கம் நியூ ஜல்​பைகுரி - நாகர்​கோ​வில், நியூ ஜல்​பை​குரி - திருச்சி இடையே என 2 அம்​ரித் பாரத் ரயில் சேவை​கள் சனிக்கிழமை தொடங்கி வைக்​கப்​பட்​டன.  நியூஜல்​பை​குரி - நாகர்​கோ​வில் அம்​ரித் பாரத் ரயி​லில் 8 இரண்​டாம் வகுப்பு தூங்​கும் வசதி கொண்ட பெட்​டிகள், 11 பொதுப் பெட்​டிகள் இணைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில் நியூஜல்​பை​குரி​யில் புறப்​பட்டு பாலசோர், கட்​டாக், புவனேஸ்​வர், விஜய​வா​டா, கூடூர், ரேணி​குண்​டா, காட்​பாடி, ஜோலார்​பேட்​டை, சேலம், ஈரோடு, திருப்​பூர், கோவை, பொள்​ளாச்​சி, உடுமலைப்​பேட்​டை, பழநி, திண்​டுக்​கல், மதுரை, விருதுநகர், சாத்​தூர், கோவில்​பட்டி வழி​யாக நாகர்​கோ​விலை அடை​யும். இந்த ரயி​லின் முதல் சேவை நாகர்​கோ​விலில் இருந்து ஜன.25 ஆம் தேதி​யும் நியூஜல்​பைகுரி​யில் இருந்து ஜன.28 ஆம் தேதி​யும் தொடங்​கும். நியூஜல்​பைகுரி - திருச்சி அம்​ரித் பாரத் ரயில் நியூஜல்​பைகுரி​யில் புறப்​பட்டு பாலசோர், கட்​டாக், புவனேஸ்​வர், விஜய​வா​டா, கூடூர், சென்னை எழும்​பூர், தாம்​பரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​ப்பாதிரிபுலியூர், சிதம்​பரம், மயி​லாடு​துறை, கும்​பகோணம், தஞ்​சாவூர் வழி​யாக திருச்​சியை அடையும். இந்த ரயி​லின் முதல் சேவை திருச்​சி​யில் ஜன.28 ஆம் தேதி​யும், நியூ ஜல்​பை​குரி​யில் இருந்​து ஜன.30 ஆம்​ தேதி​யும்​ தொடங்​கும்​.