மன்னார் வளைகுடா பகுதிகளில் கடல் நீரின் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது.இதன் காரணமாக அதைச் சுற்றியுள்ள 19 தீவுகள், மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து கடல்சார் ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது,ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சுற்றியுள்ள மன்னார் வளைகுடா பகுதிகளில் பல தீவுகள் உள்ளது.இத்தீவுகளில் சமீப காலமாக சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பத்தின் காரணமாக கடல் நீரின் அரிப்பு வேகமாக ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலைமை தொடர்ந்தால், வருகின்ற 50 ஆண்டுகளில் மன்னார்வளைகுடாவை சார்ந்த 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,அரிப்பின் காரணமாக ஏற்கனவே சில தீவுகள் கடலில் மூழ்கிவிட்டன என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.இயற்கை பேரிடர்களை தடுக்கும் தீவுகளை காக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு செய்ய வேண்டுமென கடல்சார் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.