சங்-பரிவார் மதவெறியர்கள் 12 பேர் சிறையில் அடைப்பு!
மதுரை, டிச. 4 - திருப்பரங்குன்றத்தில் கலவர முயற்சியில் ஈடு பட்ட பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட சங்-பரிவார் அமைப்புக்களைச் சேர்ந்த 12 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்ஹா அரு கில் தான் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று வெறிக்கூச்சலிட்ட இவர்கள், தடுப்புகளை சூறையாடி மலை மீது ஏறினர். பாதுகாப்பு பணி யில் இருந்த காவல்துறை யினர் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு காவல்துறையினர் காய மடைந்தனர். இந்நிலையில், அனும தியின்றி கூடுதல், பொது அமைதிக்கு பங்கம் விளை வித்தல், பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் இந்து முன்னணியைச் சேர்ந்த மு. ரகுநாத், திருமலை என்ற ராம்குமார், க. விக்கி, சி. முத்துமுருகன், மூ. நாக ராஜ், மு. சத்தியமூர்த்தி, மு. விக்னேஷ் பாண்டியன், க. தினேஷ்குமார், மா. தமிழரசு, நா.பாலகிருஷ்ணன், இல. மாசிலாமணி, த. சீனிவாசன் ஆகிய 12 பேரை திருப்பரங் குன்றம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தற்போது சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.