tamilnadu

img

இஎஸ்ஐ மருத்துவமனை இல்லாத குமரி மாவட்டம்

நாகர்கோவில், நவ.17- கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ  மருத்துவமனை கட்டும் திட்டம் 12  ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்தும் 5 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு  ஒதுக்கீடு செய்யாததால், சுமார் 50 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் தரமான உயர் சிகிச்சை பெற முடியா மல் பரிதவிப்பில் உள்ளனர். நாடு முழுவதும் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவமனைகள் உள்ளன. இதற்காக தொழிலாளர்களின் சம்ப ளத்தில் ஒன்றே முக்கால் சதவீதமும்  முதலாளி தரப்பில் அதே அளவு பண மும் பிடித்தம் செய்து, கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நிதியை ஒன்றிய அரசின் முடிவுக்கு ஏற்ப இஎஸ்ஐ நிர்வாகம்  ஒதுக்கீடு செய்கிறது. மருத்துவமனை கள் அமைப்பதற்கான இடத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும். மருத்து வர்கள், செவிலியர் உள்ளிட்ட ஊழியர்  நியமனம் மாநில அரசால் மேற்கொள்ளப் படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முந்திரி தொழில், மீன்பிடி வலைதயா ரிக்கும் தொழில், நூற்பாலை, காற் றாலை, வணிக நிறுவனங்களின் தொழி லாளர்கள், நவீன தாராளமய கொள்கை களின் விளைவாக அரசுத் துறை களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்கள் உட்பட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இஎஸ்ஐ சந்தாதாரர்களாக  உள்ளனர். தொழிலாளியின் குடும்பத் தினர் சிகிச்சை பெறுவதற்கான அடை யாள அட்டை இஎஸ்ஐ மூலம் வழங்கப் படுகிறது. இதில் ஒவ்வொரு குடும்பத் திலும் சராசரி 5 நபர்கள் என பார்த்தால்கூட இரண்டரை லட்சம் பேருக்கான நலவாழ்வுக்கான பொறுப்பை  இஎஸ்ஐ ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்காக குமரி மாவட்டத்தில் நாகர் கோவில், குழித்துறை, நித்திரவிளை, தக்கலை, ஆரல்வாய்மொழி, கருங்கல்,  இடைக்கோடு, மணவாளக்குறிச்சி மருந்தகங்களை திறந்துள்ளது. மருந்தகங்களில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இஎஸ்ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தனியார் மருத்துவ மனைகள் அல்லது திருநெல்வேலி இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். ஸ்கேன் எடுப்பதற்குகூட திருநெல்வேலி  சென்று அனுமதி பெற வேண்டும்.  மருந்தகங்களி லும் மருத்து வர்கள்  ஊழியர் பற்றா க்குறையை காரணம் காட்டி சேவை யில் சுணக்கம் காட்டப்படுகிறது. இத்தகைய குறைபாடுகளால் இஎஸ்ஐ மீது தொழிலாளர்கள் நம்பிக்கை இழந்து உள்ளதாக கூறுகிறார் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.சிங்காரன்.

தொழிலாளர்களுக்கு துரோகம்

மேலும் அவர் கூறுகையில், தொழி லாளர்களுக்கு தரமான நேரடி சிகிச்சை இஎஸ்ஐ மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இருநூறு படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியது. ஆனால்,  நூறு படுக்கைகளுடன் இஎஸ்ஐ சிறப்பு  மருத்துவமனை அமைக்க 2012 ஆம் ஆண்டு 106 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆசாரிபள்ளம் மருத்துவமனை வளாகத்தில் இதற்காக 2.47 ஏக்கர்  நிலம் ஒதுக்கீடு செய்தது மட்டுமல்ல,  அதற்கான விலையாக ரூ.7,53,20,427 நிர்ணயம் செய்து உத்தரவும் (GO.(MS) No.233 Dated 13.06.2014) பிறப் பிக்கப்பட்டது. ஆனால், மாவட்டத்தில்  உள்ள பெரிய மருத்துவமனைகளின் நலன் விரும்பிகள் தொழிலாளர் களுக்கு துரோகம் இழைத்து விட்ட னர். இதற்கு பிறகு அறிவித்த திரு நெல்வேலி, தூத்துக்குடி இஎஸ்ஐ மருத்துவமனைகள் திறக்கப்பட்டு விட்டன” என்றார்.

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை இடம் காலியாக உள்ளது

நாகர்கோவில் நாகம்மாள் மில்  தொழிலாளியும் இஎஸ்ஐ கண்காணிப்புக் குழு உறுப்பினருமான சிஐடியு நிர்வாகி மாணிக்கவாசகம் கூறுகை யில், “ஆசாரிபள்ளம் மருத்துவமனை வளாகத்தில் இடம் இல்லை என்றால், ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பா லைக்கு சொந்தமான இடத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க தேவை யான காலி நிலம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் டிசம்பர் மாதத்துக்குள் இடம் தேர்வு செய்து அறிவிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக இடத்தை தேர்வு செய்து அறிவிப்பதுடன் கட்டு மான பணிகளை தொடங்க வேண்டும்”  என்றார். நாகர்கோவில் மருந்தகத்தின் பொறுப்பு மருத்துவர் வினுகுமாரை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது, “கடந்த மாதம் ஆர்எம்ஓ (திரு நெல்வேலி) உடன் சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து இதுகுறித்து பேசி னோம். மாவட்ட ஆட்சியர் இரண்டு,  மூன்று இடங்களை பார்த்துள்ளதாக வும், விரைவில் முடிவு தெரிந்து விடும் என்றும் கூறினார். எது எப்படியோ 12 ஆண்டு கால காத்தி ருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து,  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தின ருக்கும் உயிர்காக்கும் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் தொழி லாளர்களின் எதிர்பார்ப்பு” என்றார்.

திருவட்டார் மருந்தகம்?
குறைந்தபட்சம் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஒரு மருந்தகம் அமைக்கப்பட வேண்டும். அதன்படி 
2009 இல் திருவட்டார் மருந்தகம் 
அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
15 ஆண்டுகளாகியும் திரு
வட்டாரில் மருந்தகம் திறக்கப்படாமல் கிடப்பில் உள்ளதாக தெரிவித்த சிஐடியு தலைவர் பி.சிங்காரன் அதற்கான 
அரசாணை நகலையும் வைத்துள்ளார்.