tamilnadu

img

2 வாரங்களாக பணி வழங்காததை கண்டித்து, 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் முற்றுகை

2 வாரங்களாக பணி வழங்காததை கண்டித்து, 100 நாள் வேலை திட்டத் தொழிலாளர்கள் முற்றுகை

ஈரோடு, டிச.27. 2 வாரங்களாக பணி வழங்கா ததை கண்டித்து, 100 நாள் வேலை  திட்டத் தொழிலாளர்கள் கொமர பாளையம் ஊராட்சி மன்ற அலு வலகத்தை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. கிராம ஊராட்சிகளில் உள்ள ஏழை குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித்திட்டத்தின் மூலம், 100 நாட்கள்  பணி வழங்கப்பட்டு, அதற்கான ஊதியம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகி றது. இந்நிலையில், சத்தியமங்க லம் அருகே உள்ள கொமாரபாளை யம் ஊராட்சியில் கடந்த 2 வார கால மாக 100 நாள் வேலைத்திட்ட தொழி லாளர்களுக்கு பணி வழங்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில், வெள்ளியன்று பணி வழங்குவதாக கூறப்பட்ட நிலையில், வேலைக்கு சென்ற  100 நாள் வேலை திட்டத் தொழிலா ளர்களுக்கு பணி வழங்கப்படாத தால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்டோா் கொமாரபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊரக வளர்ச்சித்துறை அதி காரிகள் மற்றும் போலீசார் போராட் டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பணி வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்தனர். அதன்பேரில்  தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.