tamilnadu

img

100 ஏக்கர் அழுகும் அபாயம்

100 ஏக்கர் அழுகும் அபாயம்

தஞ்சாவூர் மாவட்டம் அதினாம்பட்டு பகுதியில் வடிகால் வசதி இல்லாத காரணத்தால், தாளடி நெற்பயிர் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதனால் அந்த பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட 100 ஏக்கரிலான பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாஞ்சிக்கோட்டை, வல்லுண்டாம்பட்டு, அதினாம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் போர்வெல் மூலம் தாளடி நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக தொடர்ந்து 3 நாட்கள் பெய்த மழையினால் மழைநீர் வயல்களில் தேங்கியுள்ளது. இளம் நடவு என்பதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே நிலை அல்லது மீண்டும் கனமழை பெய்தால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.