சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 150 ஆண்டு நினைவு அறக்கட் டளைச் சொற்பொழிவு சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை சார்பில் அண்மையில் நடை பெற்றது. தமிழ்இலக்கியத்துறை தலை வர் பேராசிரியர் ஆ.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். சிங்கார வேலர் சிந்தனையும் இக்கால பொருத்தப்பாடும் என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில் நாதன் கருத்துரையாற்றினார். அவர் தம் உரையில், தேசியகவி பாரதியாரைக்கூட அடையாளம் காட்ட சிலர் தேவைப் பட்டனர். பாரதியார் இறந்து 7ஆண்டு களுக்கு பிறகு தான் புதுச்சேரியில் அவருக்கு நினைவுக்கூட்டம் நடத்தப் பட்டது. அதில் வ.ராமசாமி, ஜீவானந் தம் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்து கொண்டனர். இவர்களின் முயற்சிக்கு பின்னரே பாரதியாரை பற்றி தமிழ் மக்கள் தெரிந்துகொண்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937ல் நடக்காமல் போயிருந்தால் பாரதிதாசனைப்பற்றி தமிழ் மக்கள் அறிந்திருக்கமாட்டார். தமிழ்நாட்டில் பல ஆளுமைகளின் வரலாறு மறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ஒளியின் வரலாறும் மறைக்கப் பட்ட வரலாறுதான். இந்த நிலையில் சிங்காரவேலர் ஆற்றிய ஆகச்சிறந்தப் பணிகளை தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நல்ல நோக்கத்தோடு இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப் படுகிறது, மார்க்சிய சிந்தனையாளர் சிங்கார வேலர், இந்தியாவில் இடதுசாரி இயக்கம் உருவாவதற்கு அடித்தள மாக இருந்தார். 1925ஆம் ஆண்டு கான் பூரில் நடைபெற்ற முதல் கம்யூனிச மாநாட்டிற்கு தலைமை ஏற்று சொற் பொழி வாற்றினார். தோழர் ம.சிங்கார வேலர் தேசிய இயக்கம், சுயமரியாதை திராவிட இயக்கம், பொதுஉடமை இயக்கம் என மூன்று இயக்கங்களில் பங்குகொண்டிருந்தார். இருப்பினும் அவர் வரலாற்றில் மார்க்சிய வாதி யாகவே அறியப்பட்டார். 1885ல் காங்கிரஸ் கட்சி துவங்கிய கால கட்டத்தில் சிங்காரவேலர் 25 வயது இளைஞராக இருந்தார். காங்கிரஸ் கட்சியில் செயல்படுவது அந்த காலத் தில் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்தது.
காங்கிரஸ் தோன்றிய காலத்தில் சுதந்திரப்போராட்டம் அதன் கொள்கை யாக இல்லை, மாறாக பிரிட்டிஷ் அரசிடமிருந்து இந்திய மக்களுக்கு சலுகைகளை மனுக்கள் மூலம் பெற்று த்தரும் இயக்கமாகத்தான் இருந்தது. காங்கிரஸ் என்பது ஒரு கூட்டம் என்ற பொருளிலேதான் அது செயல்பட்டது. பாலகங்காதரத்திலகர் காலத்தில் தான் காங்கிரசுக்கு வீரியம் பிறந்தது. திலகர்தான் சுதந்திரம் என பிறப்புரிமை என முதலில் முழங்கினார். திலகரின் காலகட்டம் நிறைவு பெற்று 1916ல் தான் காந்தியின் காலக்கட்டம் துவங்கியது. 1917ல் சிங்காரவேலர் காங்கிரசில் இணைந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்ற னர். கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் எப்பொழுது இணைந்தார். இயக்க பணி செய்தார் என்பது குறித்து போதிய விவரங்கள் நம்மிடம் இல்லா தது கெடுவாய்ப்பாகும். கிடைத்திருக் கின்ற தகவலை வைத்துதான் அவரை ப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடி கிறது. அவர் காந்தியின் மீது மிகப் பெரிய மரியாதை கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் சோசலிச சிந்தனையோடு காங்கிரசில் பலர் இருந்தார்கள். ரஷ்ய புரட்சியின் தாக்கத்தினால் இந்தியாவில் சோசலிச மாற்றங்கள் ஏற்பட்டது. ரஷ்ய புரட்சியின் வாயிலா கத்தான் சிங்காரவேலர் பொதுஉடமை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டார். மார்க்சிய சிந்தனை ஈடுபாட்டால் அவர் காந்தியிடமிருந்து விலகினார். மேலும் காந்தியடிகள் ஆரம்பித்த ஒத்துழை யாமை இயக்கம் மக்கள் மத்தியில் கழன்றுகொண்டிருந்தபோது உபி யில் சவுரிசவுரா என்ற பகுதியில் காவல்நிலையம் சுதந்திர போராட் டக்காரர்களால் தாக்கப்பட்டது. அந்த ஒரு சம்பவத்தை காரணமாக வைத்து காந்தியடிகள் தன்னிச்சையாக ஒத்து ழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது சிங்காரவேலரை மிகவும் பாதித்தது. ஜவகர்லால்நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பல ருக்கும் காந்தியின் இந்த அணுகு முறை பிடிக்கவில்லை.
ஒரு வன்முறை சம்பவத்தை கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போராட்டத்தை திரும்பப்பெறுவது தவறு என சிங்காரவேலர் விமர்சித்தார். பின்னர் மிககுறுகிய காலத்திலேயே அவர் காங்கிரசிலிருந்து விலகினார். கம்யூனிஸ்ட்கட்சி தோற்றுவதற்கு முன்பே சிங்காரவேலர் அதன் தத்துவ சிந்தனைகளால் கவரப்பட்டிருந்தார். இந்துஸ்தான் லேபர் சிசான் என்ற கட்சியை 1923 மே1ல் துவக்கினார். சென்னையில் மேதினக்கொடியை ஏற்றிய பெருமை தோழர் சிங்கார வேலரையே சாரும். கான்பூரில் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநாட்டில் செங் கொடியை ஏற்றி வரலாறு படைத்தார். அவர் இடதுசாரியாக இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள அர சியல் சூழல்காரணமாக பெரியாரோடு இணைந்து செயல்பட்டார். பெரியா ரின் சுயமரியாதை கொள்கை யோடு மட்டும் நின்று விடாமல் அவரை சமதர்மத்தின் பாதையில் செல்லக் கூடியவராக மாற்றவேண்டும் என்று எண்ணினார். ஆனால் காலப்போக்கில் பெரியார் சமதர்மத்தை விட மற்ற அம்சங்களுக்கு அழுத்தம் தந்து நீதி கட்சிக்கு முக்கியத்துவம் தந்தார். இதன்பொருட்டு சிங்காரவேலர் பெரியாரிடமிருந்து விலகினார். நீதிகட்சி சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத கட்சி என்பதால் சுதந்திர போராட்ட வீரரரான சிங்காரவேலர் நீதிகட்சியும் பெரியாரையும் விமர் சித்தார். ஆனால்பெரியார் எந்த தருணத்திலும் சிங்காரவேலரை விமர்சிக்கவேயில்லை. அந்த அளவிற்கு சிங்காரவேலர் பெரியா ரால் பெருமைக்குரிய நபராக கருதப் பட்டார். மாறுபட்ட கருத்து கொண்டி ருந்தாலும் பெரியார் தான் நடத்திய குடிஅரசு இதழில் அறிவியல் கட்டு ரைகளைத் தொடர்ந்து வெளியிட்டார். அது பெரியாரின் பெருந்தன்மைக்கும் சான்றாக இருந்தது.
சர்வதேச அரசியலை சிந்தித்த சிங்காரவேலரின் கருத்துக்கள் தமிழக அரசியலில் எந்தஅளவிற்கு தாக்க த்தை ஏற்படுத்தியது, அவரது கருத் துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதானா, அரசியல்களத்தில் ஏற் படுத்திய மாற்றம் என்ன என்று நாம் சிந்திக்கவேண்டும். இந்திய சமுதா யத்திற்கும் அரசியல்,சமூக, பொரு ளாதார நிலையில் அவரது சிந்த னைகள் ஒத்து வரமா என நாம் ஆய்வு செய்யவேண்டும். சிங்காரவேலரின் அரசியல் செயல் பாடோடு பவுத்தத்தின் தொடர்பு பற்றியும் நாம் ஆய்வு செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட்கட்சியின் சிந்தனை வளர்ச்சி என்பது காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், மாசேதுங் போன்றவர்களோடு முடிந்து விடவில்லை. இத்தாலியில் தோன்றிய சிந்தனையாளர் அண்டோனியா கிராம்சியின் சிந்தனைகளையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மார்க்சிய தத்துவ செயல்பாடு என்பது அரசியலில் மேல்கட்டுமானம், அடிக் கட்டுமானம் என்று இரு வகைப் படுத்தப்படுகிறது. அடிக்கட்டுமானம் எனப்படும் தொழிலாளி வர்க்கம் தான் சகலத்தையும் தீர்மானிக்கிறது. கலை, இலக்கியம், பண்பாடு எனப்படும் மேல் கட்டுமானத்தை பலர் ஏற்றுக் கொள்வதில்லை ஆனால் அதுவும் சமூகமாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கிறது என்று கிராம்சி கூறினார். ஆனால் இதே கருத்தை சிங்கார வேலரும் கொண்டிருந்தார். ஒருவரை பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளா மலேயே ஒரே கருத்துடையவர்களாக இருவரும் இருந்தனர். அண்டோ னியோ கிராம்சி 22.1.1891ல் பிறந்து 27.4.1937ல் இத்தாலியில் மறைந்தார். சிங்காரவேலரோ 18.2.1860ல் சென்னை யில் பிறந்து 11.2.1946ல் மறைந்தார். சிங்காரவேலர் அசல் சிந்தனை யாளராக இருந்தார். கிராம்சியின் நூல்களை படிக்காமலேயே சிங்கார வேலர் அவரோடு ஒத்த சிந்தனையாள ராக இருந்தார். கடவுளும் மதமும் சமூ கத்தில் எப்படி மக்கள் மத்தியில் வேறூன்றி அவர்களின் ஒப்புதலோடு ஆள்கிறது. இவற்றிக்கு எதிராக நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவி யல் பூர்வமாக சிந்தித்து சிங்கார வேலர் செயல்பட்டார். சிங்காரவேலரை இந்தியாவின் கிராம்சி என்று குறிப்பிடுவது காலப் பொருத்தம் ஆகும் என்று செந்தில் நாதன் வர்ணித்தார். சொற்பொழிவு நிகழ்வை கோ.விக்னேஷ்வரி தொகுத்து வழங்கி னார். இதில் சிங்காரவேலர் சிந்தனைக்கழகம் அறக்கட்டளை தலைமைஅறங்காவலர் வீ.கலிய பெருமாள், புலவர் வீரமணி ஆகியோர் பங்கேற்றனர். பேரா.கோ.பழனி வர வேற்புரையாற்ற முதுகலை மாண வர் ச.ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.