tamilnadu

‘இந்தியாவின் கோயபல்சாக மாறியுள்ளார் அமித்ஷா’

இந்தியாவின் கோயபல்சாக மாறியுள்ளார் அமித்ஷா

மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு

விருதுநகர், அக்.22- “வெறுப்பு அரசியலின் மைய மாக இந்தியாவை மாற்றி வரு கிறார் அமித்ஷா. அவர் தற்போது இந்தியாவின் ‘கோயபல்ஸ்’ ஆக மாறியுள்ளார்” என விருதுநகர் மக்  களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். விருதுநகரில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர்  பல்வேறு கேள்விகளுக்கு பதில ளித்தார். வந்தே பாரத் ரயில் விருதுநக ரில் நின்று செல்லவில்லை என்ப தற்கான கேள்விக்கு அவர் கூறிய தாவது: “இது குறித்து ரயில்வேத் துறை  அமைச்சருக்கு கடிதம் எழுதி யுள்ளேன். மேலும், மதுரையில் நடைபெற்ற ரயில்வே பொது மேலா ளர் கூட்டத்திலும் விருதுநகர் நிறுத் தம் குறித்து வலியுறுத்தினேன். ஆனால், போதிய முன்பதிவு இல்  லாததால் நிறுத்தம் வழங்க முடி யாது என கூறியுள்ளனர். நிலைமை  மாறாவிட்டால் மக்களுடன் இணை ந்து போராட்டம் நடத்துவேன்” என்றார். அமித்ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டு “இந்தியாவில் முஸ்லிம் மக்க ளின் எண்ணிக்கை ஊடுருவல் கார ணமாக அதிகரித்துள்ளது என உள்  துறை அமைச்சர் அமித்ஷா கூறி யிருப்பது கடுமையாகக் கண்டிக் கத்தக்கது. பீகார் மாநிலத்தில் நீக்  கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் களில் 62 லட்சம் பேர் இந்துக்கள்.  ஆனால், அமித்ஷா அதைப் பற்றி  பேசவில்லை. இது ஜனநாய கத்துக்கு எதிரானது. அவரின் அர சியல் முழுக்க வெறுப்பை மையப்  படுத்தியதே. வெறுப்பு அரசியலின்  மையமாக அமித்ஷா மாறியுள் ளார்” எனக் கடுமையாக விமர்சித்தார். ஆந்திரா–தமிழகம் ஒப்பீடு தவறு “கூகுள் நிறுவனம் ஆந்திராவில்  முதலீடு செய்துள்ளது என்பது அந்த  மாநிலத்தின் தொழில் வளர்ச்சி தேவையால் மட்டுமே. தமிழகம், கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகியவை ஏற்கனவே தொழில் துறையில் முன்னணியில் உள்ள  மாநிலங்கள். எனவே, ஆந்திரா வுடன் தமிழகத்தை ஒப்பிடுவது தவறு” என்றார். “மகாராஷ்டிரா எம்.பி. மேதா  குல்கர்னி, சனிவர்வாடா மசூதி மற்  றும் தர்காவை இடிக்க வேண்டும்  என கூறியது மிகக் கண்டிக்கத் தக்கது. வரலாற்றுச் சிறப்பு மிக்க நினைவுச் சின்னத்தை அரசியல் காரணங்களுக்காக குறிவைப்பது தவறு. ‘இது எல்லோருக்குமான அரசு’ என்று பிரதமர் கூறுவது அர்த்தமற்றதாக மாறியுள்ளது. மேதா குல்கர்னி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். மக்களின் பணத்தை திருடும் அரசு “பாஜக அரசு சாதாரண மக்க ளின் நலனில் அக்கறையில்லாதது. நிதின் கட்காரி மற்றும் அஷ்வினி  வைஷ்ணவ் போன்ற அமைச்சர்கள் ஜி-பே, பாஸ்ட் டிராக் போன்ற வழிகளில் மக்களின் பணத்தை அவர்களுக்கே தெரியாமல் திரு டும் நிலை உருவாகியுள்ளது. கப்ப லூர் சுங்கச்சாவடி குறித்து பல முறை தெரிவித்தாலும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை” என  குற்றஞ்சாட்டினார். “2026 சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கி ரஸ் போட்டியிடுமா என்பதை கட்சித்  தலைமை முடிவு செய்யும். ஆனால், காமராஜர் பிறந்த மண்  என்பதால், இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முக்கியமாக எடுத்துரைக்கும்” என்றார். “இந்த முறை கடந்த தேர்தலை விட அதிக இடங்களைப் பெற வேண்டும் என்பது பலரது விருப் பம். வாய்ப்பு இருப்பதை காலம் தீர்மானிக்கும்” என்றும் அவர் கூறி னார். பீகாரில் சுமூக முடிவு ஏற்படும் “பீகாரில் கூட்டணிக் கட்சிகளி டையே தொகுதி பங்கீட்டில் சிறிய கருத்து வேறுபாடுகள் உள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் தலை வர்கள் கலந்துரையாடி சுமூகமான  முடிவு எடுப்பார்கள்” எனக் குறிப் பிட்டார்.