tamilnadu

img

“கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்”

 “கல்வி நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதே புதிய கல்விக் கொள்கையின் நோக்கம்”

மாநாட்டு மலரை மாநில நிர்வாகிகள் வெளியிட திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பெற்றுக் கொண்டார்.

திண்டுக்கல், மே 1 - “நாட்டில் உள்ள அனைவருக்கும் மத அடையாளத்தை பூசுகிற வேலை யை ஒன்றிய பாஜக அரசும் சங்  பரிவாரங்களும் செய்து வருகிறார்கள். அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது” என்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தெரி வித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் 7-வது மாநில மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றிய அவர், “அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம் என்ற உங்கள் மாநாட்டின் கோரிக்கை இந்த சமூ கத்தின் கோரிக்கை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் கோரிக்கை” என்றார். “திண்டுக்கல் பொதுவாக போராட்டத்திற்கு புகழ் பெற்ற மண். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக வேலு நாச்சியார் போர் புரிந்தார். போரில் தனது கணவரை இழந்த நிலை யில் திண்டுக்கல்லிற்கு வந்து ஹைதர் அலி, திப்பு சுல்தான், கோபால் நாயக்கர் ஆகியோரது பாதுகாப்புடன் தங்கியிருந்தார். பின்னர் விருப்பாச்சி கோபால நாயக்கருடன் இணைந்து வெள்ளை ஏகாதிபத்திற்கு எதிராக போர் புரிந்து சிவகங்கை சீமையை மீண்டும் தன்வசப்படுத்தினார். இந்த மண்ணில் இந்த மாநாடு நடைபெறு கிறது என்றால் இந்த சங்கமும் அந்த போராட்ட குணத்தோடு அடுத்த கட்ட  பணியை துவங்க வேண்டும்” என்றார்.

 “மாநில கல்வி நிறுவனங்களுக்கு நிதி மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது”

ஆரம்பப்பள்ளி முதல் கல்லூரி கல்வி வரை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு இவற்றை கண்காணிக்கிற, இந்த கல்வி நிறுவனங்களுக்கு நிதி  கொடுக்கிற அமைப்பாக செயல்படு கிறது. நீங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமலாக்கவில்லை என்று சொன்னால் உங்களுக்கு நிதி தரமாட்டேன் என்று சொல்கிறது. பி.எம்.ஸ்ரீ மாதிரிப்பள்ளிகளை உரு வாக்குங்கள் என்று சொல்கிறது. தமிழ்நாட்டில் ஏராளமான மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கே வட்டாரத்திற்கு ஒரு மாதிரிப் பள்ளி உள்ளது. மாவட்டத்திற்கு ஒரு  மாதிரிப் பள்ளி உள்ளது. இந்தியா வில் இல்லாத அளவிற்கு இந்த மாநி லத்தில் ஏராளமான மாதிரி பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் பி.எம்.ஸ்ரீ பள்ளியை உருவாக்கினால் தான் நாங்கள் நிதி தருவோம் என்று சொல்வது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இது அரசுப் பள்ளிகளை பாதுகாக்கும் நோக்கம் கொண்டதல்ல. கல்வி நிறு வனங்களை தனியாரிடம் ஒப்படைப்  பது தான் புதிய கல்விக் கொள்கை யின் நோக்கம்” என்று தெரிவித்தார். “பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்காத தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த நிதியை தரவில்லை. இது தொடர்பாக நாடாளு மன்றத்தில் குரல் எழுப்பிய தமிழக எம்.பி.க்களை நாகரிகமற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் பேசினார்” என்று சுட்டிக்காட்டினார்.

 “அனைத்து மொழிகளுக்கும் தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும்”

“தமிழ்நாட்டில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் சொற்ப அளவில் தான் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு கேந்திரிய வித்யாலயா உள்ளது. காந்தி கிராம நிகர்நிலை பல்கலைக்கழ கம், சைனிக் பள்ளி, இவை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி கல்லூரிகளும் தமிழக அரசு நடத்தக்கூடியவை” என்றார். “நாட்டில் உள்ள அனைத்து மொழி களுக்கும் தேசிய அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சொல்கிறோம். தேசிய மொழி என்று இந்தியாவில் ஒரு  மொழியை அறிவிக்க வாய்ப்புக் களே இல்லை. இந்தியை திணிக்க  முயற்சிக்கிறார்கள். எல்லா மாநி லங்களிலும் இந்தி பேசப்படுகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

 “தீவிரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” “

காஷ்மீர் மாநிலத்தை அதன்  அதிகாரத்தை சுருக்கி இன்றைக்கு யூனியன் பிரதேசமாக மாற்றி யிருக்கிறார்கள். தீவிரவாதிகள் சமீபத்தில் 26 பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தீவிர வாதத்தை எதிர்ப்பதில் இந்திய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்கிறார்கள். இந்த பிரச்ச னையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை தொடர்பு படுத்துவது, ஒரு நாட்டை குறி வைத்து பேசுவது, தீவிரவாதத்தை யார் ஊக்குவித்தாலும் அதனை கண்டிப்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தி யாவில் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து போராட வேண்டும்” என்றார். “எல்லோருக்கும் மத அடை யாளத்தை பூசுகிற அரசியல் நடை பெறுகிறது. எந்த மதத்தின் பேரில் தீவிரவாதம் வந்தாலும் அதை முறி யடிப்போம். இத்தகைய சூழலில் ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன் னோம். ஆனால் ஒன்றிய அரசு கூட்ட மறுக்கிறது. நாடு முழுவதும் தீவிர வாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டியுள்ளது” என்று வலியுறுத்தினார்.       

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மாநாடு திண்டுக்கல்லில் துவங்கியது

திண்டுக்கல், மே 1- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 7-வது மாநில மாநாடு திண்டுக்கல்லில் வியாழக்கிழமை துவங்கியது. “அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பாதுகாப்போம்; தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ நிரா கரிப்போம்; இந்தி திணிப்பை எதிர்ப் போம்; பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது. திண்டுக்கல் பிஎஸ்என்ஏ மகாலில் சங்கத்தின் ஸ்தாபக தலைவர்கள் தேவ ராஜன், நடேசன் நினைவரங்கில் மாநாடு  துவங்கியது. முன்னதாக தேசியக் கொடியை எஸ்டிஎப்ஐ தேசிய குழு உறுப்பினர் சுதா ஏற்றி வைத்தார். சங்க கொடியை மாநிலத் தலைவர் மணிமேகலை ஏற்றிவைத்தார். ஆசிரியர் அமைப்பின் அகில இந்திய அமைப்பான எஸ்டிஎப்ஐ கொடியை டேவிட்ராஜன் ஏற்றி வைத்தார். தோழர்கள் ராமுன்னி, நாகப்பன், ஆசிரியர் தேவராஜன், நடேசன், கோபால கிருஷ்ணன், ஆரோக்கியதாஸ், ஜோசப் எட்வர்ட்ஜான், முனுசாமி ஆகியோரது நினைவு ஜோதிகளை சங்கத்தின் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர். பொது மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக் குழு தலைவர் பேரா.ரெ.மனோகரன் வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் துவக்க உரையாற்றினார். கேரள மாநில ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஷபி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் லஜபதி ராய் ‘இந்திய அரசியலமைப்பும் மாணவர்களின் கல்வி உரிமையும்’ என்ற தலைப்பில் பேசினார். பொதுப்பள்ளிகளுக்கான மேடை யின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ‘சமூகநீதியை தகர்க்கும் தேசிய கல்விக் கொள்கை’ என்ற தலைப்பில் பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கருத்துரை ஆற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் மயில், பொருளாளர் கணேசன் உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.