சிவகங்கை, ஜன. 21 - வள்ளுவர், வள்ளலா ரைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்து வருவதாக தமி ழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சிவ கங்கை மாவட்டம் வந்துள் ளார். இதற்காக திருச்சியி லிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செவ்வாய்க் கிழமை வந்த முதல்வர், செவ்வாய்க்கிழமையன்று அழகப்பா பல்கலைக்கழ கத்தில் பழனியப்ப செட்டி யார் நினைவு கலையரங்க வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ. 12 கோடியில் கட்டப் பட்ட லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை திறந்துவைத்தார். பல்கலைக்கழக நிர்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் உருவச் சிலையையும் திறந்து வைத்து அவர் உரையாற்றினார். அப்போது, “குறள் நெறி பின்பற்றப்பட்டால்தான் தமிழகமும் காப்பாற்றப் படும், உலகமும் காப்பாற்றப்படும். அப்படி காப்பாற்றப்பட வேண்டு மென்றால், வள்ளுவரை கபளீகரம் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற சமத்துவத்தைப் பேசிய மாமனிதர்களைக் களவாட ஒரு கூட்டமே சதி செய்துகொண்டு இருக் கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ் வொரு தமிழனும் இருக்க வேண்டும். உயர்கல்வியில் தமிழ் நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 35 அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரி சேரும் மாணவர் களின் எண்ணிக்கை 34 விழுக்காடாக உயர்ந்துள் ளது” என்று குறிப்பிட்டார். முன்னதாக, பல்கலை கழகப் பட்டமளிப்பு விழா கலையரங்கக் கருத்தரங்கக் கூடத்திற்கு “வீறுகவியரசர் முடியரசனார் அரங்கம்” என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு நூலை முத லமைச்சர் வெளியிட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் க. ரவி பெற்றுக்கொண்டார். முனைவர் கவிஞர் அண்ணாதாசன் எழுதிய “மாண்புமிகு தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்” என்னும் நூலை முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் வெளியிட, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. ரவி பெற்றுக்கொண்டார். உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், கூட்டுற வுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, நிதி - மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்ன ரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழ் வளர்ச்சி-செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம், சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ். மாங்குடி, தமிழரசி, டாக்டர் வி. முத்து ராஜா, தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிப்பேரரசு வைரமுத்து, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், சிவ கங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், பல்கலைக்கழக பதிவா ளர் முனைவர் அ. செந்தில்ராஜன் மற்றும் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.