லக்னோ:
பாஜக தலைவர்கள் சேர்த்துள்ள சொத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.மாயாவதியின் சகோதரர்ஆனந்த் குமார். இவர் தில்லிஅருகே நொய்டாவில் பினாமி பெயர்களில், சுமார் ரூ. 400 கோடி மதிப்பிலான சொத்துக்களை வாங்கிக் குவித்திருப்பதாக கூறி, அண்மையில் அந்தச் சொத்துக் களை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த சொத்து குறித்து, ஆனந்த் குமார், அவரது மனைவி விசிதர் லதா ஆகியோருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளனர்.இதனை உடனுக்குடன் கண்டித்த மாயாவதி, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக மோடி அரசுதான் வருமான வரித்துறையை ஏவி விட்டிருப்பதாக கூறினார். இந்நிலையில், எதிர்க்கட்சியினர் மீது குற்றச்சாட்டுவைக்கும் பாஜக அரசு,தனது கட்சித் தலைவர்களின்சொத்து மதிப்பு குறித்து விசாரணை நடத்துவதற்குத் தயாரா? என்றும் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் பாஜக-வில் சேருவதற்கு முன்பு வைத்திருந்த சொத்து எவ்வளவு; இப் போது இருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு? என்பதை ஆய்வு செய்தால், அவர் களின் யோக்கியதை தெரிந்து விடும் என்றும் சாடியுள்ளார்.