போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நகராட்சிப் பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் தொடர்பாக, பாஜக எம்எல்ஏ ஆகாஷ்விஜய் வர்கியாவை போலீசார் கைது செய்துள்ளனர்.பாஜகவின் தேசிய பொதுச் செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய் வர்கியா. எம்.எல்.ஏ.வான இவரது மகன் ஆகாஷ் விஜய் வர்கியா.
இவர், மத்தியப்பிரதேசத்தில் நகராட்சி பணியாளர் ஒருவரை, தனது ஆதரவாளர்களுடன் சென்று, கிரிக்கெட் பேட்டால், விரட்டி விரட்டித் தாக்கியுள்ளார். ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கைஎடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் சென்றபோதுதான், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஆகாஷ் விஜய் வர்கியா தாக்குதல் நடத்தியுள்ளார். அவரின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டியடித்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோகாட்சிகள் சமூகவலைத் தளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, எம்எல்ஏ ஆகாஷ் உள்பட10 பேர் மீது போலீசார் வழக் குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஆகாஷை கைது செய்து, விசாரணையும் நடத்தி வருகின்றனர்.