லக்னோ:
சிஏஏ-வுக்கு எதிரான போராட்டத்தின் போது வன் முறையில் ஈடுபட்டதாக பெண்கள் பலர் உட்பட 21 பேர் மீது உத்தரப்பிரதேச பாஜக அரசு வழக்குப் பதிவுசெய்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான அடையாளம் தெரியாத நபர்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது.லக்னோ ஹூசைனாபாத் ‘கிளாக் டவரில்’, ‘லக்னோ சலோ’ என்ற பெயரில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில்தான், வன்முறை நடந்ததாகவும், போராட்டத்திற்கு தூண்டும் விதமாக கோஷங்களை எழுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.குறிப்பாக, ‘கிளாக் டவரை’ சுற்றி வரும்போது, போராட்டக்காரர்கள் போலீசாரைத் தள்ளிவிட்டதுடன், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் எப்ஐஆரில் குறிப்பிடப்பட் டுள்ளது.வழக்கறிஞரும் குடிமைஉரிமைகள் ஆர்வலருமான மொகமட் ஷோயப், காங்கிரஸ் கட்சித் தொண்டர் சதாப்ஜாபர், தலித் தலைவர் பி.சி.குரில் உள்ளிட்டோர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.